news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 2031ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும், மாநாட்டில் அண்ணாமலை நம்பிக்கை
tv

Also Watch

tv

Read this

2031ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும், மாநாட்டில் அண்ணாமலை நம்பிக்கை

WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், பிரம்மாண்டமாக முதல் மாநாட்டை கூட்டிய WE THE LEADERS அமைப்பின் தலைவர் அண்ணாமலை, 2026ஆம் ஆண்டை போலவே 2031ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சூளுரைத்தார். தவெக ஆட்சி முடியும்போது தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கணித்தார்.

பொள்ளாச்சியில் அண்ணாமலை
தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் முதல் மாநாடு, பொள்​ளாச்​சி​யில் நடை​பெற்​றது. இந்த அமைப்​பின் தலைமை வழி​காட்​டி​யான அண்​ணா​மலை பேசி இருப்ப​தாவது:

பொள்​ளாச்சி மண்​ணில் பெரிய எதிர்​பார்ப்பு, நம்​பிக்​கையோடு நின்று கொண்டு உள்​ளோம். இது, ஒரு போதை ஒழிப்பு மாநாடு. இங்கு உள்ள ஒரு தன்​னார்​வலரின் தந்தை, இப்போது தான் உயி​ரிழந்​தார். அவர் மதுப் ​பழக்​கத்​திற்கு ஆளானவர். அதை​யும் தாங்​கிக்​கொண்டு போதைக்கு எதி​ராக அந்த தன்​னார்​வலர் இங்கு நின்று கொண்​டு இருக்கிறார், போதைக்கு எதி​ராக வலு​வாக உள்​ளோம்.

நானும் தன்னார்வலர் தான்...
இந்த அமைப்பில், 38 நாட்களில் 19 லட்​சம் பேர் உறுப்​பின​ராக சேர்ந்​து உள்​ளனர். தமிழகத்​தில் நல்​ல​வர்​கள் உள்ளனர், வாய்ப்​புக்​காக காத்​து இருக்​கின்றனர். இந்த அமைப்பு, எனது குடும்​பத்​திற்கு சொந்​த​மானது அல்ல, உங்​களுக்​கானது. இந்த அமைப்பை பொறுத்​தவரை நானும் ஒரு தன்​னார்​வலர் தான்.

இந்த அமைப்பின் உறுப்​பினர்​கள் 50 லட்​சத்தை எட்​டும் போது நிரந்​தர​மாக ஒரு நல்ல சமுதாயம் உரு​வாகும். சுற்​றுச்​சூழலை பாது​காக்க 50 லட்​சம் மரக்​கன்​றுகளை நட உள்​ளோம். ஆறு மாதம் இலக்கு வைத்​து உள்​ளோம்.

தவெக அரசுக்கு மரியாதை
2026ஆம் ஆண்டு ஒரு கோடியே 65 லட்​சம் வாக்​காளர்​கள் வாக்​களித்து ஒரு அரசை தேர்ந்​தெடுத்​து உள்ளனர். இந்த அரசுக்கு மரி​யாதை தர வேண்​டும்.
தவெக அரசில் உள்ள அமைச்​சர்​கள் பெரும்​பாலானோர் முதல் முறை​யாக அமைச்​ச​ர் ஆனவர்​கள், தடு​மாற்​றம் இருக்​கத்​தான் செய்​யும், தடு​மாறும் போது தூக்கி விட வேண்​டும், கீழே அழுத்​தக்​கூ​டாது. தமிழகத்தை முதன்மை மாநில​மாக மாற்ற வேண்​டும் என்​பது இலக்கு. அதை நோக்​கித் ​தான் உழைப்பு இருக்​கும்.

நாம் ஆட்சிக்கு வரும் போது...
‘வீ த லீடர்ஸ்’ அரசி​யல் கட்​சி​யாக மாறப் ​போகிறது, கிராமம் ​தோறும் சென்று மக்​களை சந்​திக்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு தனி நபர் மீதும் 4 லட்​சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்​ளது.

தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்​கும், அடுத்த ஆண்​டும் அதே​போல் கடன் வாங்​கும். நாம் ஆட்​சிக்கு வரும் போது அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் உலகத்​தரம் வாய்ந்த சிகிச்சை தரப்படும்.

உண்​மை​யான சமூக நீதி, நிலை​யான வளர்ச்​சி, விவ​சா​யத்​தில் எழுச்​சி, பண்​பாட்டு மீட்​சி, அரசி​யல் புரட்சி ஆகியன நமது இலக்​காக இருக்​கும்​.தமிழகத்​தில்​ 2031ஆம் ஆண்டு​ ஆட்​சி​யை பிடிப்​போம்​.
இவ்​வாறு அண்ணாமலை பேசி உள்ளார்.

Related Link

"திமுககாரன் ஓடவும் மாட்டான், ஒளியவும் மாட்டான்" ஏர்போர்ட்டில் இறங்கியதும் எ.வ.வேலு அதிரடி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பல வருட கண்ணீருக்கு விடிவுகாலம், ஒரே உத்தரவில் ரிலீஸான 3,085 ஏக்கர்

6
38 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau