news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் கைது, நடிப்பு அரக்கனுக்கு கீழ்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட்
tv

Also Watch

tv

Read this

வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் கைது, நடிப்பு அரக்கனுக்கு கீழ்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட்

ஒரே அடியில் END கார்டு வைத்த போலீஸ்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இன்ஸ்டாகிராம் உலகத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், நடிப்பின் நாயகன் சூர்யாவையும் மிஞ்சப் போவதாக சவடால் அடித்து கொண்டு, நெட்டிசன்களின் ஏகோபித்த ட்ரோல் மெட்டீரியலாக வலம் வந்த திவாகரை, சென்னை கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீஸார் மதுரையில் வைத்து தூக்கி இருக்கிறார்கள். ஒரு தர்பூசணி, 2 எஃப்.ஐ.ஆர், 4 போலீஸ் வண்டி என்கிற ரேஞ்சுக்கு, இப்போது சோஷியல் மீடியா முழுக்க ஓடிக் கொண்டிருக்கும் நடிப்பு அரக்கனின் வாலண்டியர் கைது படலத்தை விவரிவாக பார்க்கலாம்.

தனக்குத் தானே நடிப்பு அரக்கன்...
ரீல்ஸ் உலகத்தில், லைக்குகளை அள்ளுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கம்பாசிட்டிவ் மனோபாவம், இன்றைக்கு கம்பி எண்ண வைத்திருக்கிறது.
கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா கையில் ஒரு தர்பூசணிப் பழத்தை வைத்துக்கொண்டு, மிரட்டலாக சல்யூட் அடிக்கும் ஒரு காட்சி வரும்.

அதை திவாகர், சோஷியல் மீடியாவில் அப்படியே ரீ-கிரியேட் செய்கிறேன் என்று ஒரு வீடியோவை தட்டிவிட, நெட்டிசன்கள் அதைத் தங்களின் காமெடி மெட்ரியலாக மாற்றி, ட்ரோல் செய்ய தொடங்கினர். ஆனால், அதை தவறாக புரிந்துகொண்ட திவாகரோ, நம்முடைய நடிப்புக்கு உலகமே அடிமை என்று மனப்பால் குடித்துக்கொண்டு, தனக்குத்தானே நடிப்பு அரக்கன் என்று டைட்டில் கார்டே போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்.

நேர்காணலில் அசுரத்தனம்
இதை தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் சீசன் 9 மற்றும் சாட்டிலைட் டிவிக்கள் என படியேறிய திவாகருக்கு, பாப்புலாரிட்டி கூடின உடனே ஆட்டிடியூட் கொஞ்சம் தலைக்கேறி விட்டது. அதன் விளைவாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளிக்க சென்ற இடத்தில், நிருபர்கள் கேட்ட கேள்விகள் நடிப்பு அரக்கனுக்குப் பிடிக்கவில்லை.

உடனே, ரௌடி பேபி மோடிற்கு மாறிய திவாகர், அங்கிருந்த ஊழியர்களை தரக்குறைவாக பேசி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, லைட்ஸ் உள்ளிட்ட பொருட்களை உடைத்து தனது அசுரத்தனத்தை காட்டியிருக்கிறார்.

காவல்துறை வழக்குப்பதிவு
இதைப் பார்த்து, வாயடைத்து போன யூடியூப் ஊழியர் கார்த்திக், கீழ்ப்பாக்கம் காக்கி வட்டாரத்தில் கம்ப்ளைன்ட் செய்ய, ஆபாசமாக பேசுதல், தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற பிரிவுகளின்கீழ் திவாகர் மீது வழக்குபதிவு செய்தனர். பொதுவாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் எப்பேர்ப்பட்ட கொம்பனும் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே வழக்கம். ஆனால், வாட்டர்மெலன் ஸ்டாரோ சில தினங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர், யூடியூபர் ஊழியர் கார்த்திக்கிடம் பணம் வாங்கிக் கொண்டு திட்டமிட்டு என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார் என்று சட்டத்தையே சல்லடை போட்டு சலவை செய்தார்.

இரண்டாவது புகார்...
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாக பரவ, பதறிப்போன கார்த்திக், திவாகருக்குப் போன் செய்து, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வீடியோவை நீக்க சொல்லியிருக்கிறார். அதற்கு நடிப்பு அரக்கனோ, வீடியோவை நீக்க வேண்டும் என்றால் எனக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், இல்லையென்றால் உன்னை சோலி முடித்துவிடுவேன் என்று போன்லேயே லோக்கல் தாதா ரேஞ்சுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் டென்ஷனான அவர், நேராகக் கீழ்ப்பாக்கம் ஸ்டேஷனுக்கு ஓடிச்சென்று 2ஆவது கம்ப்ளைன்ட்டையும் தட்டினார். உடனே, திவாகர் மீது பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செகண்ட் எஃப்.ஐ.ஆர் பாய்ந்தது.

இரவோடு இரவாக...
ஒரே ஆளு, ஆனால் அடுத்தடுத்து இரண்டு ஸ்ட்ராங்கான கேஸ்கள். இனிமேலும் இவரை வெளியே விட்டால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த கீழ்ப்பாக்கம் போலீஸார், சைபர் செல்லின் உதவியோடு திவாகரின் மொபைல் நெட்வொர்க்கையும், சிக்னலையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். போலீஸ் தன் பின்னாடி வருவதை மோப்பம் பிடித்த நடிப்பு அரக்கனோ, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தனது சொந்த ஊரான மதுரைக்கு எஸ்கேப் ஆகி பதுங்கியிருந்தார்.

ஆனால், கீழ்ப்பாக்கம் போலீஸ் டீம் இரவோடு இரவாக மதுரை விரைந்து, அங்குள்ள லோக்கல் போலீஸ் உதவியோடு திவாகரை பிடித்திருக்கிறார்கள். தற்போது இந்த 2 வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தர்பூசணி ஸ்டாரை, சென்னைக்கு வண்டியில் ஏற்றி அழைத்து வந்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பி எண்ணும்...
நெட்டிசன்கள் செய்த தக் லைப் ட்ரோல்களை எல்லாம் தன் நடிப்புக்கு கிடைத்த ஆஸ்கார் விருது என தவறாக புரிந்துகொண்டு, நிருபர்களின் கேமராவை உடைத்த வாட்டர்மெலான் ஸ்டாருக்கு, சென்னை போலீசார் நள்ளிரவில் மதுரைக்கு சரப்ரைஸ் விசிட் அடித்து சிறையில் கம்பி எண்ணும் பாக்கியத்தை கொடுத்திருக்கின்றனர்.


Related Link
‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்’ கார்டுடன் ஜனநாயகன்

‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்’ கார்டுடன் ஜனநாயகன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2031ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும், மாநாட்டில் அண்ணாமலை நம்பிக்கை

4
23 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau