Also Watch
Read this
By: Web Team

பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஊழல் விசாரணை விவகாரத்தில் கட்சி மூத்த தலைவர்கள் மீது குற்றம் சாட்டியதால் தந்தை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். பிஆர்எஸ் கட்சியில் இருந்து மகள் கவிதாவை தற்காலிகமாக நீக்கி தெலங்கானா முன்னாள் முதல்வரும், அந்த கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைவர்கள் மீது தொடர்ந்து கவிதா குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி மகள் கவிதா மீது தந்தை சந்திரசேகரராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தெலங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ். இவர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியின் தலைவராக இருந்தார். தேசிய அரசியலில் ஆர்வம் வந்ததால், தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றம் செய்தார்.
அதன்பிறகு, தெலங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. சந்திரசேகர ராவின் மகள் கவிதா கட்சியில் செயல்பட்டு வருகிறார். அவர் எம்எல்சியாக உள்ளார்.
இந்நிலையில் தான் கவிதா சமீபகாலமாக தனது சகோதரரான ராமராவுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது ஊழல், முறைகேடு புகார்களை முன்வைத்தார்.
இது சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் கட்சியில் இருந்து மகள் கவிதாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved