Also Watch
Read this
Posted on: Feb 18, 2026 06:52 AM
By: Manigandan Raja
தமிழகத்தில், காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வரும் 26ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுகவில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, செல்வராசு மற்றும் கனிமொழி சோமுவின் மாநிலங்களவை பதவிக் காலம் முடிகிறது. அதிமுகவில் தம்பிதுரை மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பத்து மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு வரும் மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 26ஆம் தேதியன்று இதற்கான அறிவிக்கை வெளியாகும். வேட்புமனுக்கள் தாக்கல் அன்றைய தினமே தொடங்கும். மார்ச் 5, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். மார்ச் 9ல் வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். வாக்கு எண்ணிக்கையானது வாக்குப் பதிவு நாளிலேயே நடைபெறும்,
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு எம்பிக்கள் யார் யார்?
ஏப்ரல் 26ஆம் தேதியுடன் 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, பி.செல்வராசு, கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, அதிமுக கூட்டணியில் உள்ள தமாகவின் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால், திமுக 4 எம்.பி.க்கள், அதிமுக 2 எம்.பி.க்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சட்டப்பேரவைத் தேர்தல்
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியே இழுபறியாக இருக்கும் நிலையில், மார்ச் 16 ஆம் தேதி, மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆளும்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு சீட் ஒதுக்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved