Also Watch
Read this
By: Manigandan Raja

பிரேசில் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது :
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 3 வது சுற்றில் நார்வே அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. பிரேசில் மற்றும் நார்வே அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியின் 70 மற்றும் 90 வது நிமிடத்தில் நார்வே வீரர் Erling Haaland இரு கோல்கள் அடித்தார்.
தொடர்ந்து கூடுதல் நேரத்தில் பிரேசில் அணி வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்த நிலையில், நார்வே அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மகளிர் உலகக் கோப்பை - ஆஸ்திரேலியா சாம்பியன் :

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவரில் 150 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக NAT 54 ரன்களை எடுத்தார். 151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஜார்ஜியா 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்த வந்த பெத் 64 ரன்கள், போபி 48 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்று 7 ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
சிஎஸ்கே கேப்டன் சர்ச்சை - வெளியான புதிய தகவல் :

2026 ஐபிஎல் தொடரில் மோசமான பார்ம் காரணமாக 2027 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி ருத்ராஜ் கெய்க்வாட் இடம் இருந்து பறிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில்,அடுத்த சீசனிலும் அவரே கேப்டனாக தொடர சிஎஸ் கே நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது. கெய்க்வாட் அணியிலிருந்தே விடுவிக்கப்பட்டு வேறு ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் பரவி வந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.