news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
tv

Also Watch

tv

Read this

முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

"இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி"

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை நடந்திருக்கும் நிலையில், தாங்கள் நியமித்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதல்வர் அவர்களே? என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். பெற்றவர்களுக்கு தெரியாமலேயே குழந்தையின் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்யும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என்றும் உதயநிதி கூறி உள்ளார்.

என்ன செய்கிறார்கள்?
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?

காட்டாட்சி வீழ்வது உறுதி
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமது பதிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவை மேற்கோள் காட்டி, உதயநிதி இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டேன், சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்து பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோரின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?" என்று பதிவிட்டிருந்தார்.

Related Link
ஆ.ராசாவுக்குப் பொதுச்செயலாளர் பதவி? மாநில அரசியலில் கனிமொழி என்ட்ரி?

ஆ.ராசாவுக்குப் பொதுச்செயலாளர் பதவி? மாநில அரசியலில் கனிமொழி என்ட்ரி?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

4
7 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved