news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திட்ட பெயர்கள் மட்டுமே மாறி உள்ளது என உதயநிதி விமர்சனம்
tv

Also Watch

திட்ட பெயர்கள் மட்டுமே மாறி உள்ளது என உதயநிதி விமர்சனம்

"தவெக அரசுக்கு திராணி இல்லை"

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றியதை தவிர வேறு எந்த மாற்றமும் பட்ஜெட்டில் இல்லை என உதயநிதி விமர்சித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவெக அரசுக்கு திராணி இல்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பூஜ்ஜியம் தான்...
இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
நூறு நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம் தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும். பட்ஜெட்டுக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண் தான். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை. மாற்றம், மாற்றம் என்று கூறியவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது.

திமுக அரசின் ஸ்டிக்கர்
திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது. அன்பு சோலை என திமுக கொண்டு வந்த திட்டத்துக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்' என்றும் `உலகம் உங்கள் கையில்' என்ற லேப்டாப் திட்டத்துக்கு `வெற்றி மடிக்கணினி திட்டம்' என்றும் `கலைஞர் கனவு இல்லம்' திட்டத்துக்கு `வெற்றி வீடு திட்டம்' என்றும் `முதல்வர் படிப்பகங்கள்' திட்டத்துக்கு `டிஜிட்டல் நூலகம்' என்றும் `நன்னிலம்' திட்டத்துக்கு `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை மாற்றி உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்து உள்ளனர்.

தைரியம் இல்லை...
திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவெக அரசுக்கு தைரியம் இல்லை. சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து கேள்வி கேட்பதை தடுக்கவே என்னை கைது செய்து அலைக்கழிப்பு செய்தனர். தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த 5 வாரங்களில் 4 காவல் மரணங்கள் நடந்து உள்ளன. ஜாதி ஆணவக் கொ*கள் நடந்து உள்ளன.

தேர்தல் வாக்குறுதியில்...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் தருவதாக முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். ஆனால், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved