Also Watch
Read this
By: Web Team

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மல்லை சத்யா கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக மதிமுக, மகன் திமுகவாக மாறி விட்டது. தன்னுடைய மகனுக்காக கட்சிக்காக உழைத்த என்னைப் போன்றோரை இழந்துவிட்டார்.
எப்போது, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல, நான் அவருக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று சொன்னாரோ, அன்றே காசு கொடுத்த வாங்கிய கட்சி வேட்டிகளை அவிழ்த்து விட்டோம், காரில் பறந்த கட்சி கொடிகளை அகற்றிவிட்டோம்.
என்னுடைய வாழ்க்கையில், வசந்த காலமான 32 ஆண்டுகளைக் கட்சிக்காக நான் இழந்திருக்கிறேன். ஆனாலும், எனக்கு ஒரு மனநிறைவு இருக்கிறது. என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.
தனது மகன் குறித்து வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயக படுகொலை செய்திருக்கிறார்.
இவ்வாறு மல்லை சத்யா கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved