news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை...

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீலகிரி, கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்றும், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை...
இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது;
கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

ஜூன்-20  
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்கள்
வட தமிழகத்தில் ஒருசில இடங்கள்
புதுச்சேரி
காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை

நீலகிரி
ஈரோடு
சேலம்
தருமபுரி
கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஜூன் 21ஆம் தேதி
தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நெல்லை மாவட்ட மலைப்பகுதி
நீலகிரி
கோவை
திண்டுக்கல்
தேனி
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

தொடர் மழை
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை

சென்னை, புறநகர்ப் பகுதிகளில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை ஜூன் 20ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்காக...
தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.


Related Link
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு

       


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன், நேரில் வாழ்த்திய ஜேசன் சஞ்சய்

6
1 hr 7 mins agoshare
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன், நேரில் வாழ்த்திய ஜேசன் சஞ்சய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved