news-tamil-logo

3/19/2026, 1:23:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பெண்கள் வாக்குக்கு குறி, பரிசு மழையில் பெண்கள்
tv

Also Watch

tv

Read this

பெண்கள் வாக்குக்கு குறி, பரிசு மழையில் பெண்கள்

வாக்காளப் பெருமக்களே... தேர்தல்-2026

Posted on: Feb 11, 2026 12:36 PM

40

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் தேதியே அறிவிக்கப்படாத சூழலில், திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டிக் கொண்டு பரிசு பொருட்களை மக்களுக்கு வாரி வழங்க தொடங்கியிருக்கிறது. பெண்களை குறி வைத்து பரிசுப் பொருட்களை அள்ளி தெளிக்கும் வியூகம் கை கொடுக்குமா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தொகுதியிலேயே முகாம்...
சட்டமன்ற தேர்தலுக்கு, விரைவிலேயே தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் யார் யார்? வெற்றி வியூகம் என்ன? என்பது குறித்து பிரதான கட்சிகள் கவனம் செலுத்தி வர, இதர கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தொகுதிகளுக்கு அடிக்கடி விஜயம் செய்வதும், தொகுதி மக்களை சிறப்பாக கவனிப்பதும் பிஸியாக இறங்கியிருக்கிறார்களாம். முக்கியமாக, திமுக, அதிமுகவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட இருக்கும் முக்கிய பிரமுகர்கள், தொகுதியிலேயே முழு நேரத்தை செலவிட தொடங்கி இருக்கிறார்கள்.

5 ஆயிரம் சில்வர் பாத்திரங்களை...
இந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதி மக்களுக்காக எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சார்பில் சில்வர் பாத்திரங்கள் வந்திறங்கியுள்ளது. கடந்த முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்க வாய்ப்பு என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, தொகுதி மக்களுக்காக சுமார் 5 ஆயிரம் சில்வர் பாத்திரங்களை இறக்கியிருக்கிறார் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு டோக்கன் என வழங்கப்பட்டு பாத்திரங்கள் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

150 பெண்களுக்கு துணி துவைக்க வாஷிங் மிஷின்
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, அதிமுக நகர பொறுப்பாளர் ஜி.கே.ராம்குமார் சார்பில், 150 பெண்களுக்கு துணி துவைக்க வாஷிங் மிஷின் வழங்கப்பட்டது. வாஷிங் மெஷின்களை பெற்றுக் கொண்ட பெண்கள், மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கும் வகையில் சிரித்த முகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

பெண் வாக்காளர்களை குறி வைத்தே...
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்ய முடியாது என்ற நிலையில், முன்கூட்டியே திட்டம் போட்டு பரிசு பொருட்களை அள்ளி வீசி வருகின்றனர். அதிலும், பெண் வாக்காளர்களை குறி வைத்தே பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இயல்பாகவே பெண்களுக்கு பரிசுப் பொருட்கள் மீது ஆர்வம்
அதிகம். அதிலும் சாதாரண, நடுத்தர குடும்பத்து பெண்களுக்கு வாஷிங் மிஷின் மாதிரியான பொருட்கள், எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

பரிசு மழையில் நனைய...
தமிழ்நாட்டில் இருப்பதிலேயே பெண் வாக்காளர்கள் தான் அதிகம். ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சம் பேர் இருக்கும் நிலையில், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழக அரசியலில் பெண்கள் வாக்கு முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், அந்த வாக்குகளை குறி வைத்து தான் அரசியல் பிரமுகர்களும் வியூகங்கள் அமைத்து வருகிறார்கள். தற்போதே அண்டா, குண்டா என பெண்கள் பரிசு மழையில் நனைய தொடங்கியிருக்கும் நிலையில், தேர்தலை ஒட்டி இன்னும் நிறைய ஜாக்பாட் கிடைக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

Related Link
ராயபுரத்தில் ஜெயக்குமார் Re-Entry

ராயபுரத்தில் ஜெயக்குமார் Re-Entry

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 36 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved