Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய மகளிர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய மகளிர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். தைவானின் தைபேயில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தைவானின் வாங் போ வெய் மோதினர்.
இதில், உன்னதி ஹூடா 21-க்கு 10, 21-க்கு 18 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில், இந்தியாவின் தன்வி ஷர்மா - தஸ்னிம் மிர் மோதியதில் தன்வி ஷர்மா 21-க்கு 16, 22-க்கு 20 என்ற செட் கணக்கில் வென்றார். அதேபோல், இந்தியாவின் அன்மோல் கார்ப், தன்யா ஹேமந்த், தேவிகா சிஹாக் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ரன்களும், பாகிஸ்தான் 282 ரன்களும் எடுத்திருந்தன.

2-வது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 211 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் தொடரில் 1-க்கு 0 என முன்னிலை வகிக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved