Also Watch
Read this
By: Manigandan Raja

காட்டுத்தீ நிவாரணமாக வழங்கிய கால்பந்து வீரர் மெஸ்ஸி
ஸ்பெயினின் மாட்ரிட் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 90 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். அதிக வெப்ப அலையால் ஜூலை 24-ம் தேதி காட்டுத்தீ பரவி, 84 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கருகியதோடு, 56-க்கும் மேற்பட்டோர் கட்டாய இடம்பெயர்வுக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழலில், அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி 80 ஆயிரம் யூரோ நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் தோல்வியுற்ற நிலையில், பகைமை பாராட்டாமல் அவர் நிதியுதவி அளித்தது பாராட்டை பெற்றுள்ளது.
ரஷ்யாவின் முன்னணி வீரர் அதிர்ச்சி தோல்வி
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷ்யாவின் முன்னணி வீரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், சீனாவின் ஷான் ஜுன்செங் ஆகியோர் மோதினர்.

இதில், சிறப்பாக விளையாடிய சீன வீரர் முதல் செட்டை 7-க்கு 5 என வென்றார். இதற்கு பதிலடியாக ரூப்லெவ் 2-வது செட்டை 6-க்கு 4 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை சீன வீரர் 7-க்கு 6 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில் கிரீசின் சிட்சிபாஸ், பிரிட்டனின் கேமரூன் நூரி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உள்ளிட்டோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இஷான் கிஷன் பாட்னா ஆர்.பி.ஐ வங்கியின் உதவி மேலாளராக பணிபுரிகிறார்
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளராக பணியில் சேர்ந்துள்ளார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஆர்பிஐயில் நியமிக்கப்பட்டுள்ள அவர், கிரிக்கெட் போட்டிகள் இல்லாத காலங்களில் வங்கி பணிகளையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அலுவலகப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved