Also Watch
Read this
By: Web Team

கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற நீரஜ் சோப்ரா, தாம் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Jan Zelezny போன்ற ஜாம்பவான்கள் வெற்றி பெற்ற மதிப்புமிக்க இப் போட்டியை சிறு வயது முதலே பார்த்து வளர்ந்த தனக்கு, இதில் வெற்றி பெற வேண்டும் என்பது மிகப்பெரிய இலக்காக இருந்ததாக கூறிய அவர், தற்போது அந்த இலக்கை எட்டியது மகிழ்ச்சி என்றாலும், இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார்.
கோல்டன் ஸ்பைக் போட்டியில் 85.29 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்த நீரஜ், முன்னதாக தோஹா டைமண்ட் லீக் போட்டியில் 90.23 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கு உதவியர்கள்..