news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனை
tv

Also Watch

tv

Read this

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனை

Vaibhav Suryavanshi

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வைபவ் சூர்யவன்ஷி

222 பந்துகளில் 500 ரன்கள் கடந்து சாதனை :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறைந்த பந்துகளில் அதிவேகமாக 500 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக 260 பந்துகளில் 500 ரன்களை கடந்த வீரராக கிளென் மேக்ஸ்வெல் இருந்தார். தற்போது வைவ் சூர்யவன்ஷி 222 பந்துகளிலேயே 500 ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ள தோனி?

மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி வீரர் தோனி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் கால் தசைப்பிடிப்பு காரணமா தோனி பங்கேற்வில்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என தகவல் வெளியானது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை:

நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.

இரு அணிகளும் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் 3-வது வெற்றியை பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் புதிய சாதனை :

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடியதன் மூலம், டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல், அந்த அணிக்காக 100 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு முன்பு ரிஷப் பண்ட் மட்டுமே டெல்லி அணிக்காக 100-க்கும் மேற்பட்ட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியிருந்தார்.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றச்சாட்டு :

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மே 31ம் தேதியுடன் ஐபிஎல் போட்டி நிறைவு பெறவுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக ஜூன் 6ம் தேதி ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

இதனால் அணியின் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் பிசிசிஐ சித்ரவதை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Related Link
ஐபிஎல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்

ஐபிஎல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, திரையுலகம் சோகம்

3
32 mins agoshare
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved