Also Watch
Read this
By: Web Team

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 19புள்ளி 1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved