Also Watch
Read this
By: Web Team

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான குறைந்த ஊதியத்தை கூட திமுக அரசு சுரண்டுவதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கான 6 சதவீத ஊதிய உயர்வை முழுமையாக சேர்க்காத அதிகாரிகள், முதலில் 3 சதவீதம் எனவும், அடுத்து 3 சதவீதம் எனவும் சேர்த்து ஊதிய விகிதத்தை கணக்கிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதன் மூலம் தொழிலாளர்களின் ஊதியத்தில் மூவாயிரம் ரூபாய் வரை சுரண்டப்படுவதாகவும், ஊதியச் சுரண்டல் என்ற புதிய தாக்குதலை திமுக அரசு நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : குறுவை, சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved