Also Watch
Read this
By: Web Team

நீலகிரி, கோவை மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கோவை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved