Also Watch
Read this
By: Manigandan Raja

எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, நாடு திரும்புவேன்
தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தனது மக்களுக்காக நாடு திரும்பப் போவதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தெற்காசியாவின் வெளிநாட்டு செய்தியாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், தனது இந்த திரும்புதல் அதிகாரத்தை கோருவதற்காக அல்ல எனவும், நாட்டை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்வதற்காகவே எனவும் தெரிவித்தார்.
ஜனநாயகத்திற்கான தனது நாட்டின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஷேக் ஹசீனா கேட்டுக்கொண்டார்.
ஈரானில் 5 மாதத்தில் 56 பேருக்கு மரண தண்டனை
ஈரானில் 2026 மார்ச் மாதம் முதல் தற்போது வரை 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் வோல்கர் டுர்க் தெரிவித்துள்ளார்.
மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மரண தண்டனை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
ஹோர்முஸ் நீரிணையில் புதிய வழித்தடம்: ஏமன் ஒப்புதல்
ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமனுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவு பணியில் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த செயல்பாட்டில் எந்தவொரு வெளித்தரப்பினரும் தலையிடாத பட்சத்தில், இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவடையும் எனவும் கூறியுள்ளது. இது குறித்து பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாயி, முன்மொழியப்பட்ட பாதையின் புவியியல் ஆயக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.