Also Watch
Read this
By: Manigandan Raja

தாக்குதலில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய காய்கறி வியாபாரி
உக்ரைனில் காய்கறி வியாபாரியை ரஷ்யாவின் ட்ரோன் விரட்டி சென்று தாக்குதல் நடத்திய பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கெர்சன் நகரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் அந்த நபரை, ரஷ்யாவின் ட்ரோன் ஒன்று விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியது.
எனினும், இந்த தாக்குதலில் அந்த காய்கறி வியாபாரி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ட்ரோன் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன், இது பொதுமக்களை அச்சுறுத்தும் திட்டமிட்ட வெறிச்செயல் என தெரிவித்துள்ளது.
இந்திய கப்பல் மீது தாக்குதல்: 13 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
செங்கடலில் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய இந்திய கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏமன் நாட்டுக்கு அருகே இந்திய கொடியுடன் சென்ற "எம்.எஸ்.வி ஃபைஸ் நூர் ஒலியா" ((MSV Faize Noore Oliya)) வணிகக் கப்பல் மீது ஆளில்லாத படகு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த கப்பலில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 14 மாலுமிகள் இருந்தனர். தகவலறிந்த ஏமன் கடலோர காவல் படையினரும், கடற்படையினரும் விரைந்து சென்று 14 பேரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். வணிக கப்பல் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved