Also Watch
Read this
By: Manigandan Raja

ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்ததால், பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது.
இந்த சூழலில், நேற்று திடீரென ஜோர்டான் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப், ஈரானை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, ஈரானிய படைகளுக்கு நிச்சயம் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.
செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம்

செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் உதவியுடன் கட்டணம் வசூலிக்க ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டு வருவதாக ஏமன் அரசு குற்றம்சாட்டி உள்ளது.செங்கடல் பகுதியின் ஒரே நுழைவுப் பாதையான 32 கிலோ மீட்டர் அகலமுடைய பாப் அல் - மண்டப் நீரிணை ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஹவுதிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஏமன் அமைச்சர் மொஅம்மர் அல் எர்யானி தெரிவித்துள்ளார். இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் போலீஸ், தீயணைப்பு வீரர்கள் 7 பேர் பலி

அர்ஜென்டினாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். சான் ஜுவான் மாகாணம் வலே ஃபெர்டில் ((Valle Fertil)) பகுதியில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில், இப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று இஸ்சிகுவாலாஸ்டோ மாகாண பூங்கா பகுதியில் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.