Also Watch
Read this
By: Manigandan Raja

ஈராக் மீது அமெரிக்கா, சவுதி அரேபியா இணைந்து தாக்குதல்
ஈராக் மீது அமெரிக்காவும், சவுதி அரேபியாவுயும் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், 32 பேர் காயமடைந்தனர். ஈராக்கில் 7 மாகாணங்களில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வயல்கள், கிடங்குகள், கிணறுகளை குறிவைத்து ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இத்தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கருங்கடலில் இந்திய மாலுமிகள் மீதான தாக்குதல்

கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகள் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு உக்ரைன் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும், ரஷ்யா மீது உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைபேசி வழி உரையாடல் நடத்த விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை எனவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 5 போலீஸார் பலி

பாகிஸ்தானில் காவல் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள காவல் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், 5 போலீஸார் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்ததோடு, பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.