Also Watch
Read this
By: Web Team

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியர்கள் விசா இன்றி 14 நாட்கள் வரை தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் வளர்ச்சி பெறவைக்கும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ்க்கு வரும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசு முனைப்பு காட்டியுள்ளது. விசா இன்றி இந்தியர்கள் தங்கலாம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved