Also Watch
Read this
By: Web Team

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க அதர்வா ஒப்புக்கொள்ளாததற்கு மிகவும் வருத்தப்பட்டதாக, இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
அதர்வா நடிப்பில் உருவான டி.என்.ஏ படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், பரியேறும் பெருமாள் படத்தின் கதை சொல்லப்பட்ட முதல் ஹீரோ அதர்வா தான் என கூறினார்.
முரளி சாருடைய பையன் ஹீரோ ஆகிட்டார் என்றதுடன், பாணா காத்தாடி வந்த உடனே, பரியேறும் பொருமாள் கதையுடன் வெச்சு யோசித்த ஹீரோ அதர்வா தான் என குறிப்பிட்ட மாரி செல்வராஜ், சில காரணங்களால பரியேறும் பெருமாள் படத்தில் அதர்வாவால் நடிக்க முடியவில்லை என்றார்.