news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 61 வயதில் மூன்றாவது திருமணம் செய்த பிரபல நடிகர்
tv

Also Watch

tv

Read this

61 வயதில் மூன்றாவது திருமணம் செய்த பிரபல நடிகர்

திருமணம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமீர்கான்

3ஆவது திருமணம் செய்த பிரபல நடிகர்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கானுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்றுருந்துச்சு. ஆனால் அந்த 2 திருமணத்திலும் மனக்கசப்பு காரணமா தனது 2 மனைவிகளிடம் இருந்தும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தாரு அமீர்கான்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு 61 வயசு ஆகுது. இந்த சூழலில் தனது காதலி கவுரி ஸ்ப்ராட்-ஐ ( Gauri Spratt ) ஜூலை 5ஆம் தேதி மூன்றாவது திருமணம் செஞ்சுருக்காரு. இந்த திருமணம் Special Marriage Act சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதா சொல்றாங்க.

அதே மாதிரி, இந்த திருமணம் மும்பையில் மிகவும் எளிமையான முறையில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சில முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றுருக்கு.

வெளியானது இதயம் முரளி படத்தின் டிரைலர் 


ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் 'இதயம் முரளி' படத்தில் இருந்து 'கட்டழகி' என்ற வீடியோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு. இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகிருக்கிறது.

அதில், "காதலையும் சொல்ல முடியாது... அதுக்கான காரணத்தையும் சொல்ல முடியாது" என்ற வரி தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருது. இந்த படத்தில், அதர்வா முரளி, கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன், நடராஜன் சுப்ரமணியம், ஃபஹத் பாசில், பிரக்யா நக்ரா இவர்களுடன் யூடியூப் பிரபலம் சுதாகர் ஜெயராமன், ட்ராவிட் செல்வம் உள்ளிட்டோர் நடித்திருக்காங்க.

தமன் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற ஜூலை 10-ம் தேதி வெளியாகிறது. அதே மாதிரி இந்த படம் மூலம் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநரா அறிமுகமாகிறாரு என்பது குறிப்பிடத்தக்கது.


சல்மான் கான் படத்திற்கு இப்படியா நடக்கணும்!..


2020-ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் இந்தியா–சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு ‘Battle of Galwan’ என்ற பெயரில் அபூர்வா லக்கியா இயக்கத்தில் திரைப்படம் உருவாக்கப்பட்டுச்சு.

இந்த படத்தில் சல்மான் கான், சித்ரங்கடா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்காங்க. ஆனா, இந்த படத்தின் டீசர் வெளியானதும் "வரலாற்று உண்மைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக" சீன அரசு ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாங்க.

இதையடுத்து படத்தின் தலைப்பு ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ ( Maatrubhumi: May War Rest In Peace )-னு மாத்திருந்தாங்க. அதே மாதிரி, இந்த படம் முதலில் ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியிட திட்டம் போட்டுருந்தாங்க ஆனா சில காரணங்களால் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவச்சிருந்தாங்க.

இந்த நிலையில் தற்போது, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வச்சிருக்காங்க. இதனால இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக வாய்ப்பு கம்மி தான்னு தகவல்கள் வெளியாகி வருது.

"பார்வதி சிறந்த இயக்குநராக மாறுவாங்க.."


இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கத்தில் பிருத்விராஜ், பார்வதி திருவோத்து நடித்துள்ள 'ஐ நோபடி' ( I Nobody ) திரைப்படம் வருகிற ஜூலை 9-ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றுருக்கு.

அதில், பேசிய நடிகர் பிருத்விராஜ், "பார்வதி மிகவும் புத்திசாலித்தனமான நடிகை. எனக்கு பார்வதியை நீண்ட காலமாகத் தெரியும். சினிமாவைப் பற்றிய அவரது ஆழமான புரிதலைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த இயக்குநராக உருவெடுப்பார் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு" என்று பிருத்விராஜ் தெரிவித்திருக்காரு.

மலையாளத்தில் வெளியான 'என்னு நின்டே மொய்தீன்' ( Ennu Ninte Moideen ) , 'கூடே' (Koode) படங்களுக்குப் பிறகு, பிருத்விராஜ், பார்வதி திருவோத்து மீண்டும் இணைந்துள்ள படமா இந்த படம் பார்க்கப்படுது.


பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர்னா சும்மாவா


அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'பிளாஸ்ட்' படம் கடந்த மே 28-ம் தேதி வெளியாகிருந்துச்சு. படம் வெளியானதில் இருந்தே தொடர் வசூல் வேட்டையில் மாஸ் காட்டிய 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் இறுதி வசூலை படக்குழு வெளியிட்டுருக்காங்க.

அதன் படி, இந்த பிளாஸ்ட் திரைப்படம் ரூபாய் 76 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறதாம். இந்த வசூல் படத்திற்கு செலவு செய்த பணத்தில் இருந்து 4 மடங்கு அதிகம்னு சொல்றாங்க. அதே மாதிரி, அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநரா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜை நினைத்து கண்கலங்கிய ஊர்வசி


சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மறைந்த நடிகர் பாக்யராஜ் குறித்து பேட்டி அளித்த நடிகை ஊர்வசி கண்கலங்கிருக்காங்க. அதில், "நான் படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்வேன்.

ஆனால், பாக்யராஜ் சார் மட்டும் ஒரு நாள் கூட என் கையால் சாப்பிட முடியவில்லை. அந்த வருத்தம் இன்னும் என் மனதில் இருக்கிறது.." என்று கண்ணீருடன் உருக்கமாக பேசிருக்காங்க. மேலும், "எனக்கு கிடைத்த அனைத்து விருதுகளையும் பாக்யராஜ் சாருக்கே சமர்ப்பணம் செய்கிறேன்" என்று தெரிவித்துருக்காங்க நடிகை ஊர்வசி

Related Link
திரிஷாவின் நாய்க்குட்டி குறித்து பேசிய விஷ்ணு விஷால்

திரிஷாவின் நாய்க்குட்டி குறித்து பேசிய விஷ்ணு விஷால்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘முதல்வர்’ என்ற வார்த்தை திடீர் நீக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை..

0
1 min agoshare
Payilagambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau