Also Watch
Read this
By: Manigandan Raja

திறந்து விடப்பட்ட 12 காளைகள் :
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஹள்ளி கிராமத்தில் ஶ்ரீஅக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு
விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவின் 7வது நாளான இன்று எருது விடும் நிகழ்ச்சியில் 12 கிராம பொதுமக்கள் ஒன்றினைந்து ஊருக்கு ஒரு காளைகள் விதம் 12 காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குலவழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர்கவுண்டர் காளை விடப்பட்டது.

அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர் இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட பாலக்கோடு போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved