news-tamil-logo

3/15/2026, 11:03:20 AM

news-tamil-logo
more
Home districtnews விபத்து போல் செட்டப் செய்த பயங்கரம்
tv

Also Watch

tv

Read this

விபத்து போல் செட்டப் செய்த பயங்கரம்

வண்ணாங்குளம், திருவண்ணாமலை

Posted on: Feb 21, 2026 09:46 AM

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாலையோரத்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர். விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த காவல் துறை. வழக்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட். உடனிருந்த நண்பர்களே இளைஞரை கொலை செய்தது ஏன்? அடித்து கொன்றுவிட்டு அக்சிடண்ட் போல் செட்டப் செய்த குற்றவாளிகள் சிக்கினார்களா?
நைட்டு 11 மணிக்கு மேல, ரோந்து பணியில இருக்குற போலீஸுக்கு ஒரு ஃபோன் கால் வந்துருக்குது. வண்ணாங்குளம் மெயின் ரோட்டுல ஒருத்தரு ஆக்சிடண்ட் ஆகி இறந்து கிடக்குறதா அந்த வழியா போனவங்க சொல்லியிருக்காங்க. உடனே போலீஸ்காரங்க ஸ்பாட்டுக்கு போய் பாத்தப்ப, 23 வயசு மதிக்கத்தக்க இளைஞர் ஒருத்தரு இறந்து கிடந்துருக்காரு. மெயின் ரோடுங்குறதால பக்கத்துல எந்த கடையும் இல்ல. அந்த சைடு போய்ட்டு இருந்த வண்டிகள்ல ஏதாவது ஒன்னு, இளைஞர் மேல மோதிட்டு நிக்காம போய்ருக்கனும்னும், அதுலதான் இளைஞர் இறந்து போயிருப்பாருன்னும் சொல்லிருக்காங்க.

* மெயின் ரோட்டில் கிடந்த இளைஞர் சடலம்
* சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை
* அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக தகவல்


இறந்து கிடந்தது யாரு என்னன்னு விசாரிச்சப்ப தான், அவரு காட்டுகாநல்லூர் கிராமத்த சேர்ந்த சந்தோஷ்ங்குறது தெரியவந்துருக்கு. வண்ணாங்குளத்துல இருந்து காட்டுகாநல்லூருக்கு டூவீலர்ல போய்ட்டு இருக்கும்போது ஸ்பீடா வந்த கார், பைக் மேல மோதியதுல தான், சந்தோஷ் உயிர் பிரிஞ்சுருக்கும்னு போலீஸ் நெனச்சாங்க. சந்தோஷோட சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம், விபத்து வழக்கு பதிவு செஞ்சு, பைக் மேல மோதிட்டு நிக்காம போன வாகனத்த தேடிட்டு இருந்தாங்க.

* சடலத்தை போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பிய போலீஸ்
* வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை


இதுக்கு நடுவுலதான், போஸ் மார்டம் ரிப்போர்ட் வந்து கேஸையே தலைகீழா புரட்டிப் போட்டுருக்கு. சந்தோஷ் உடம்புல அக்சிடண்ட்னால ஏற்பட்ட காயம் இருந்தாலும், அவரோட உயிர் போறதுக்கு அது காரணம் இல்லன்னும், யாரோ அவர் தலையில கண்ணாடி பாட்டிலால அடிச்சிருக்காங்கன்னும், அதுலதான் சந்தோஷோட உயிர் பறி போய்ருக்குன்னும் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல தெள்ளத்தெளிவா குறிப்பிடப்பட்டிருந்துருக்கு. அதுக்கப்புறம்தான், வழக்கை வேற கோணத்துல கையாள ஆரம்பிச்சாங்க போலீஸ்.

* "கண்ணாடி பாட்டிலால் தலையில் அடித்ததால் உயிர் பிரிந்துவிட்டது"
* வழக்கை புரட்டிப்போட்ட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்
* குற்றவாளிகள் யார்? - போலீஸ் தீவிர விசாரணை


சந்தோஷ யார் தலையில அடிச்சது, அவருக்கு என்ன ஆச்சு இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடி போலீஸ் தீவிர விசாரணை பண்ணாங்க. அதுலதான், சந்தோஷுக்கு ஆக்சிடண்ட் ஆகிடுச்சுன்னு நாடகமாடுன அவரோட நண்பர்கள்தான் கொலையாளிங்குறது தெரியவந்துச்சு.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணில உள்ள காட்டுகாநல்லூர சேர்ந்த அஜய், சக்திகுமார், சந்தோஷ் ஆகிய மூணு பேரும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். எங்க போனாலும், மூணு பேரும் ஒன்னாதான் போவாங்களாம் அப்படி, மூணு பேரும், வழக்கம்போல, வண்ணாங்குளத்துல உள்ள டாஸ்மாக் கடைக்கு போயிருக்காங்க. மது பாட்டில் வாங்கி வந்த மூணு பேரும் அங்க இருந்த காலியான இடத்துல, உக்காந்து குடிச்சிருக்காங்க. அப்போ, லேசா போதை தலைக்கு ஏற ஆரம்பிச்சதும் மனைவிய பிரிஞ்சு தனியா இருக்குற சக்திகுமார வம்பிழுத்துருக்காரு சந்தோஷ்.

* வழக்கம்போல் மதுபான கடைக்கு சென்ற நண்பர்கள்
* ஒன்றாக அமர்ந்து மதுகுடித்த அஜய், சக்தி குமார், சந்தோஷ்
* மதுபோதையில் சக்திகுமாரை வம்பிழுத்த சந்தோஷ்
* சக்திகுமாரின் மனைவியை தகாத வார்த்தையில் பேசிய சந்தோஷ்


மதுபோதையில இருந்த சந்தோஷ், சக்திகுமாரோட மனைவிய தகாத வார்த்தைகளால் பேசுனதா சொல்லப்படுது. இந்த கிண்டலும் கேலியும் ஒருகட்டத்துல ரெண்டுபேருக்குள்ள பயங்கர வாக்குவாதமா மாறிருக்குது. அதனால பொறுமையிழந்த சக்திகுமார், பீர் பாட்டிலால நண்பன் சந்தோஷோட தலையிலயே அடிச்சிருக்காரு. அப்போ, வலி தாங்க முடியாத சந்தோஷ் அந்த இடத்துலேயே சுருண்டு விழுந்துருக்காரு. ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திகுமார், சந்தோஷ கண்மூடித்தனமா தாக்க, அத தடுக்காம இருந்த அஜயும், சந்தோஷ காட்டுமிராண்டி தனமா தாக்கிருக்காரு. அதுல நிலைகுலைஞ்ச, சந்தோஷ் சம்பவ இடத்துலேயே துடிதுடிச்சு உயிரிழந்துட்டாரு.

* சக்திகுமார், சந்தோஷ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
* பீர் பாட்டிலால் சந்தோஷின் தலையில் அடித்த சக்தி குமார்
* சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சந்தோஷ்
* அஜய், சக்திகுமாரை கைது செய்த காவல்துறையினர்


அவரு உயிரிழந்ததும் பயந்துபோன அஜயும், சக்திகுமாரும் போலீஸ்ல சிக்கக்கூடாது அப்டிங்குறதுக்காக, சந்தோஷ் சடலத்த வண்ணாங்குளம் மெயின் ரோட்டுக்கு கொண்டு போய் போட்டது மட்டுமில்லாம, ஆக்சிடண்ட் மாதிரி செட்டப் பண்ணிருக்காங்க. விசாரணையில, மொத்த உண்மையும் தெரியவரவே, சந்தோஷ அடிச்சே கொலை செஞ்ச அஜையையும், சக்திகுமாரையும் கைது பண்ணி ஜெயில்ல தள்ளிருக்காங்க.

Related Link
முழு சொத்தையும் உரிமை கோரிய தம்பி

முழு சொத்தையும் உரிமை கோரிய தம்பி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

0
9 mins agoshare
PDY Murder








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved