news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவன்
tv

Also Watch

tv

Read this

சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவன்

தூத்துக்குடி

29

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut 11

சாத்தான்குளத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பட்டியலின மாணவன் சிவானந்தத்திடம் விசிக தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் திருமாவளவனிடம் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

மாணவனிடம் வீடியோ காலில் பேசிய திருமாவளவன்
முதலூர் பகுதியில் உள்ள தூய மிகாவேல் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜீவானந்தம் அந்தப் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் 5பேரால் கழிவறையில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு நெஞ்சு எலும்பு உடைபட்ட நிலையில் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. சாத்தான்குளம் டிஎஸ்பி இடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ காலில் பேசினார்.

கண்ணீருடன் பேசிய தாய்
அப்போது கண்ணீர் மல்க பேசிய மாணவனுடைய தாய் எனக்கு என் ரெண்டு பிள்ளைகளும் படிக்க வேண்டும் ஐயா என்னுடைய மகன் தாக்கப்பட்டு புகார் அளித்தும் காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்ததால் என்னுடைய இரண்டு பசங்களையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என கண்ணீருடன் தெரிவித்தார்.

எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்ட என் மகன் இதனால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் ஆசீர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக்கு என் மகனுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தொல் திருமாவளவன் கூறினார். இதனை கேட்ட திருமாவளவன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளடிடம் பேசுவதாக உத்தரவாதம் அளித்தார்.

Related Link
கோட்டையை கோட்டை விடுமா அதிமுக?

கோட்டையை கோட்டை விடுமா அதிமுக?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
51 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved