news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீட்டுக்காக போராடும் அதிமுகவினர், உள்ளடி வேலை செய்யும் திமுகவினர்?
tv

Also Watch

சீட்டுக்காக போராடும் அதிமுகவினர், உள்ளடி வேலை செய்யும் திமுகவினர்?

கிருஷ்ணகிரி வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

81

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த கட்சியில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படலாம், சிட்டிங் எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகள், தொகுதி மக்களின் மனநிலை என்ன உள்ளிட்டவற்றை அலசி ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

* கிருஷ்ணகிரி களம் என்பது திடீர் டிவிஸ்ட்களை தரும் தொகுதி
* சிட்டிங் எம்.எல்.ஏ.வான அசோக் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு
* கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளரான அசோக் குமார்

எதிர்பாராத திருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் பரபரத்து கொண்டிருக்கும் தமிழக அரசியல் களம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் கள நிலவரத்தை அலசி ஆராய்ந்து வரும் சூழலில், கிருஷ்ணகிரி தொகுதியின் களம் என்பது திடீர் டிவிஸ்ட்களை தரும் தொகுதியாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. அதிமுகவை சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ.வான அசோக் குமார், முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளர். எனவே, இந்த முறையும் அவரது ஆசியோடு சீட் வாங்கிவிட தீவிரமாக முயன்று வருகிறார்.

* அதிமுக எம்.பி. தம்பிதுரையின் ஆதரவாளரும் சீட் பெற முயற்சி
* அம்மா பேரவையை சேர்ந்த கே.ஆர்.சி.தங்கமுத்து சீட் கேட்பதாக தகவல்
* அண்மையில் கட்சியில் இணைந்த பரிதா நவாப் வாய்ப்பு கேட்க திட்டம்

ஆனால், கிருஷ்ணகிரியை சேர்ந்த அதிமுக எம்.பி. தம்பிதுரையின் ஆதரவாளரான அம்மா பேரவை மாவட்ட தலைவரான கே.ஆர்.சி.தங்கமுத்து இம்முறை சீட் கேட்டு எம்.ஜி.ஆர். மாளிகையை வட்டமடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுதவிர கால் நூற்றாண்டாக அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த திமுகவை சேர்ந்த பரிதா நவாப் அண்மையில் அதிமுகவில் ஐக்கியமானதால் எம்.எல்.ஏ. சீட் கேட்டு கோதாவில் குதித்துள்ளார்.

* பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் தொகுதியை மாற்றிக் கொள்ள முடிவு?
* அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் உள்ள மதியழகன்
* முன்னாள் எம்.எல்.ஏ.வான செங்குட்டுவனும் சீட் கேட்பதாக தகவல்

திமுகவில் தற்போதைய மாவட்ட செயலாளராகவும் பர்கூர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள மதியழகன் தொகுதியை மாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறாராம். அவரது முதல் சாய்ஸே கிருஷ்ணகிரி தான் என சொல்லுகின்றனர் உடன்பிறப்புகள். அதுமட்டுமின்றி மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் சீட் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடனே கிருஷ்ணகிரியை அவர் டிக் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வான செங்குட்டுவன் சீட் கேட்டு அறிவாலய கதவுகளை தட்டி வருகிறாராம். தலைவிரித்தாடும் உட்கட்சி பூசலால் உடன்பிறப்புகள் உஷ்ணத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் ஜோதி மாவட்ட அமைச்சர் ஈடுபட்டுள்ளாராம். அவர் ஆசியோடு தான் வேட்பாளர் தேர்வும் இருக்குமாம். போதாக்குறைக்கு திமுக வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி.அன்பரசுவும் தனக்கு வேண்டப்பட்டவர்களின் மூலமாக தலைமைக்கு தூது அனுப்பி வருகிறாராம்.

* திமுக வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசனும் சீட் கேட்கிறார்
* செங்குட்டுவனை நிற்க விடாமல் செய்ய உள்ளடி வேலை செய்யும் மா.செ.?

திமுக மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு மீண்டும் பர்கூர் தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டால், கிருஷ்ணகிரியில் தனது ஆதரவாளர்களில் ஒருவரையோ அல்லது பி.டி.அன்பரசுவையோ நிறுத்த வேண்டும் என உள்ளடி வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் செங்குட்டுவன் தேர்தலில் வென்று விட்டால் அவரது பெயர் அமைச்சரவையில் இடம்பெற்றுவிடும் என்ற அச்சத்தில் அவருக்கு சீட் கிடைக்க கூடாது என்பதில் உள்ளூர் கோஷ்டிகள் முடிவு செய்துள்ளன. அதற்கும் வாய்ப்பில்லாமல் போனால், வேறு வழியே இன்றி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை தள்ளிவிடும் எண்ணத்தில் இருக்கிறாராம் மாவட்ட செயலாளர் மதியழகன்.

* வேறு வழியே இன்றி கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிடவும் திட்டம்?
* தவெக மத்திய மாவட்ட இணைச் செயலாளர் முகுந்த் பாண்டியனுக்கு சீட்?

தவெகவைப் பொருத்தவரை மத்திய மாவட்ட இணைச் செயலாளர் முகுந்த் பாண்டியனுக்கு சீட் தரப்படலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மக்கள் எளிதில் அணுக கூடிய இடத்தில் இல்லாததும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரப்படாததும் சிட்டிங் எம்.எல்.ஏ.வின் மைனசாக இருக்கிறது. ஆனால் எப்போதும் போல இந்த முறையும் தேர்தல் முடிவுகள் நெக் டூ நெக் ஆக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

Related Link
தேர்தல் பயணம்

தேர்தல் பயணம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved