Also Watch
Read this
By: Manigandan Raja

பேருந்து விபத்து :
சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற தனியார்பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரேணுகாவிஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்தை ஓட்டியவர் கதிர்வேல் (25 வயதுக்கு மேற்பட்டவர்) என தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved