news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
tv

Also Watch

சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

சொக்கநாதபுரம், சிவகங்கை

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Rackla race

சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்  : 

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

சொக்கநாதபுரம் - மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
பெரிய மாட்டுப் பிரிவிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாற்று பிரிவிற்கு 6 மைல் தூரமும் பந்தைய எல்லையிலாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

பெரிய மாட்டு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், இரு சுற்றுங்களாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முந்தி சென்றன. இப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இப்போட்டியினை சொக்கநாதபுரம், மதகுபட்டி, முத்தனம்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறங்களில் கூடி நின்று உற்சாகமாக கண்டு களித்தனர்.

Related Link
கல்லூரிக்கு அருகேவுள்ள காலியான திடலில் சடலம் மீட்பு

கல்லூரிக்கு அருகேவுள்ள காலியான திடலில் சடலம் மீட்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அப்பாக்குட்டி" திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved