news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சீமானுக்கு பேச கற்றுத் தந்ததே கலைஞர் தான்...
tv

Also Watch

tv

Read this

சீமானுக்கு பேச கற்றுத் தந்ததே கலைஞர் தான்...

தஞ்சாவூர்

44

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnj 11

சீமானுக்கு பேச கற்றுத் தந்ததே கலைஞர் தான் என்றும் இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதற்காகத்தான் திமுகவை சரமாரியாக வசைபாடுகிறார்கள் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். திருவிடைமருதூரில் புதிய கல்லூரியில் சமூக நீதி மாணவர் விடுதி திறப்பு விழா நடைபெற்றது. அதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு விடுதியை திறந்து வைத்தார்.

புதிய மாணவர்கள் சேர்க்கை
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டிலேயே புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு புதிய மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது என்றும் கல்லூரிக்கு 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகவும் கூறின்னார்.

இன்னும் பல சாதனைகள் தொடரும்
மேலும் இதே ஆண்டிலேயே சமூக நீதி மாணவர் விடுதி அனுமதி பெற்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், உயர்கல்வி துறையில் சாதிக்கப்பட்டுள்ள இவைகள் தவிர மேலும் திருவிடைமருதூர் தொகுதிக்கு இன்னும் பல சாதனைகள் தொடர்வதற்கு தமிழக முதல்வருக்கு அனைவரும் என்றும் நன்றி பராட்டுபவர்களாக இருக்க வேண்டும் என கேட்ட்க்குகொண்டார்.

மேடை மாறி தாக்குதல் நடத்துவது நியாயமா?
தொடர்ந்து பேசிய அமைச்சர் கோவி.செழியன் காய்ந்த மரத்தில் தான் கல்லடிபடும் என்பார்கள், கலைஞரிடம் பேச பயிற்சி பெற்ற சீமான் போன்றவர்கள் மேடை மாறி தாக்குதல் நடத்துவது நியாயமா என்பது பொது மக்களுக்கு தெரியும் என கூறினார். திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த் அவர்,
இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்பதற்காகத்தான் திமுகவை அனைவரும் வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். சீமான் போன்றவர்களின் பேச்சை எல்லாம் பெரிது படுத்த வேண்டியது இல்லை என விமர்சனம் செய்தார்.

Related Link
கோட்டையை கோட்டை விடுமா அதிமுக?

கோட்டையை கோட்டை விடுமா அதிமுக?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 42 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved