news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழக அரசுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி
tv

Also Watch

tv

Read this

தமிழக அரசுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி

கூடலூர், நீலகிரி

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Land struggle

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி :

அதிமுக பாஜக உள்ளிட்ட தேசிய கூட்டணியில் உள்ள கட்சியினர் கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து பேருந்து நிலையம் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

கூடலூரை சுற்றியுள்ள ஓவேலி ,கூடலூர், தேவர் சோலை, நெல்லியாலம் சேரம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் 3476 ஏக்கர் நிலத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . அந்தப் பகுதியினை வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலமாக அறிவித்திடவும் அதில் கூட்டம் கூட்டமாக மக்களை குடியேற்றும் CLUSTER MODEL SETTLEMENT செய்ய அனுமதி வேண்டியும்.

மீதமுள்ள 31,510 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி காப்பு காடுகளாக (RESERVE FOREST ) அறிவிக்க அனுமதி வேண்டி அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவு பல்லாண்டு காலமாக பிரிவு 17 வகை நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது இதனால் கூடலூர் பகுதி மக்களுக்கு எதிர்காலம் குறித்த பதற்றத்தையும் பெரும் அச்ச உணர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளதாக.

அதிமுக, பாஜக உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இன்று கண்டன பேரணியை நடத்தினர் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய கண்டன பேரணி புதிய பேருந்து நிலையம் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது .

பிரதான சாலையில் கண்டன பேரணி நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். கட்சி பாகுபாடின்றி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரி வியாபாரிகளிடம் கடை அடைப்பு போராட்டம் நடத்த ஆதரவு கேட்ட நிலையில் வியாபாரிகள் சங்கமானது பேரணி நடந்து முடியும் வரை கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.

Related Link
அங்கன்வாடி மையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு

அங்கன்வாடி மையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 59 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved