news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews "கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, ஒருவருக்கு மட்டுமே தொடர்பு"
tv

Also Watch

tv

Read this

"கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, ஒருவருக்கு மட்டுமே தொடர்பு"

காவல்துறை விளக்கம்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கும்மிடிபூண்டியில், சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை சம்பவம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்ல என, காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. கைது செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த ஒருவர் மட்டுமே சம்பவத்தில் தொடர்புடையவர் என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

சிப்காட் தொழிற்சாலை அருகே...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. உடனடியாக, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைக்கு சிகிச்சை தரப்பட்டது. . இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பிஞ்சி மஞ்சி கைது
இதனை தொடர்ந்து, குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள பிபின் மஞ்சு என்பவருக்கு மட்டுமே குற்றத்தில் தொடர்பு இருப்பதாக போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 3 வயது பச்சிளம் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் தரப்பட்டுள்ளது. முட்புதரில் படுகாயங்களுடன் கிடந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சோகம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பீகாரை சேர்ந்தவன் கைது செய்யப்பட்டான். பிஸ்கட் வாங்கிக் கொடுத்து அழைத்துச்சென்று இரக்கமற்ற செயலில் ஈடுபட்ட பயங்கரம், அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பொது மக்கள் புகார்

குழந்தையை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கி கைதானவன் மட்டுமல்லாமல் மேலும், மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போலீசிடம் புகார் அளித்தனர். ஒரே அறையில் தங்கியிருந்த நால்வரும் குழந்தையை அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாகவும் தகவல் தெரிவித்தனர்.

கொடூரனின் வீடியோ காட்சி
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொடூரன் விபின் மஞ்சியை, போலீசிடம் ஒப்படைக்கும் முன்பு, பொதுமக்கள் அடித்து உதைத்து உட்கார வைத்திருந்த காட்சி வெளியாகி உள்ளது. இந்நிலையில், சிறுமி பாலியல் படுகொலையை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
அதிகாரமே இல்லாத சிங்கப்பெண் படை எதற்கு? கனிமொழி கேள்வி

அதிகாரமே இல்லாத சிங்கப்பெண் படை எதற்கு? கனிமொழி கேள்வி

          


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சோலார் இருக்கு, கரண்ட் எதுக்கு? முதல்வரை கேட்டால் மின்சாரம் வந்திடுமா?

3
10 mins agoshare
சோலார் இருக்கு, கரண்ட் எதுக்கு? முதல்வரை கேட்டால் மின்சாரம் வந்திடுமா?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved