news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆவணக் காப்பக கண்காட்சிக் கூடம் திறப்பு
tv

Also Watch

tv

Read this

ஆவணக் காப்பக கண்காட்சிக் கூடம் திறப்பு

சென்னை

38

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவணக் காப்பக கட்டடம் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 100 ஆண்டுகள் பழமையான அரிய ஆவணங்களை பாதுகாக்க ரூ. 10 கோடி மதிப்பீட்டில் ஜப்பானிய திசு முறையிலான செப்பனிடும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

ஆவணக் காப்பக கண்காட்சிக் கூடம் திறப்பு
எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் முன்னிலையில் உயர் கல்வித் துறையின், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள கட்டடம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், 100 ஆண்டுகள் பழமையான அரிய ஆவணங்களை பாதுகாக்க 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பானிய திசு முறையில் செப்பனிடும் பணிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆவணக்காப்பகம்
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் நிர்வாகம் சார்ந்த அரிய ஆவணங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் கடந்து 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.40 கோடி ஆவணங்கள் கொண்டுள்ள இந்த காப்பகத்தில் தமிழ்நாட்டின் விடுதலை வரலாறு, சமூக நீதி வரலாறு, அரசு நிர்வாக வரலாறு மற்றும் காலனீய கால அரசுத்துறைகளின் காலவாரியான ஆவணங்கள், நில வரைபடங்கள், நில ஆவணங்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன.


நவீன கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்
அந்த வகையில் பொதுமக்களும், மாணவர்களும் வரலாற்று ஆவணங்களைப் பார்வையிடும் வகையில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன கண்காட்சிக் கூடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதை விவரிக்கும் ஆவணம், மெட்ராஸ் ராஜதானி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணம், சென்னையை எம்டன் கப்பல் தாக்கியதை பற்றிய ஆவணம் உள்ளிட்ட அரிய ஆவணங்களை பார்வையிட்டார்.


ஜப்பானிய திசு முறையில் பாதுகாக்கும் பணிகள் துவக்கம்
அதேபோல் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவணக்காப்பகத்தின் தலைமை அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் 100 ஆண்டுகள் பழமையான 10 இலட்சம் அரிய ஆவணங்களை ஜப்பானிய திசு முறையில் (Japanese Tissue) செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Related Link
பேசும் பொழுது அடிப்படை அறிவு வேண்டும்

பேசும் பொழுது அடிப்படை அறிவு வேண்டும்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 55 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved