news-tamil-logo

3/19/2026, 4:25:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனி ராஜ்ஜியம் நடத்தும் பொன்முடி
tv

Also Watch

tv

Read this

தனி ராஜ்ஜியம் நடத்தும் பொன்முடி

விழுப்புரம் வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

Posted on: Feb 20, 2026 09:58 AM

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனி ராஜ்ஜியம் நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் பொன்முடியால், விழுப்புரம் திமுகவில் உட்கட்சி பூசலை உச்சத்தில் எட்ட வைத்திருக்கிறது. தனக்கு எதிராக யாரும் வளர்ந்து விடக் கூடாது என முளையிலேயே கிள்ளி எரியும் பொன்முடியின் பாலிடிக்ஸ், உடன் பிறப்புகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், விழுப்புரம் திமுகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. அதோடு, 2026 தேர்தலுக்கு யார் வேட்பாளர் என்பதில் ஒவ்வொரு தொகுதியிலும் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. யாருக்கு சீட் கொடுப்பது? என அந்தந்த தலைமையும் பரிசீலனை செய்து வர, ஒரு மாவட்டத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ராஜ்ஜியம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக புகார் எழுந்துள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்த பொன்முடி, தனது வாயை அடக்க முடியாமல் எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார். மகளிர் பேருந்தை ஓசி என பேசியது, ஊராட்சி மன்ற தலைவியை சாதி பெயரை சொல்லி அடையாளப்படுத்தியது என பொன்முடிக்கும், சர்ச்சைகளுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அமைச்சர் பதவியை இழந்தாலும் கட்சியில் பொன்முடியின் ஆதிக்கம் குறையவில்லை என்ற நிலையில் தான், விழுப்புரம் திமுகவிலும் பொன்முடிக்கு எதிராக நிர்வாகிகள் பொருமிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

* விழுப்புரம் மாவட்டத்தில் தனி ராஜ்ஜியம்
* அமைச்சர் பதவி போனாலும் செல்வாக்கு குறையாமல் இருக்கும் பொன்முடி
* உள்ளூர் திமுக நிர்வாகிகள் புலம்பும் நிலை


புதிதாக யார் கட்சிக்கு வந்தாலும் வளர விடாமல் முடக்கி விடும் பொன்முடி, காலம் காலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தான் சீட்டு என எழுதப்படாத விதியாக பின்பற்றி வருகிறாராம். விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகள் இருக்கும் நிலையில், எந்த தொகுதியாக இருந்தாலும் தாம் கை காட்டும் நபராக தான் இருக்க வேண்டும் என கறார் காட்டி வருகிறார். 2026 தேர்தலுக்கும் இதே பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. அந்த வகையில், பொன்முடியின் டார்கெட்டில் சிக்கியிருப்பது எம்.எல்.ஏ. லட்சுமணன் தான் என்கிறார்கள். விழுப்புரம் தொகுதியில் 2021 தேர்தலில் போட்டியிட்டு அதிமுக முக்கிய புள்ளியான சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் தான் லட்சுமணன். இந்த அளவுக்கு செல்வாக்கு கொண்ட லட்சுமணனுக்கு வருகிற தேர்தலில் சீட்டு கொடுக்க விடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறாராம் முன்னாள் அமைச்சர் பொன்முடி.

* தன்னை தாண்டி யாருமே வளர்ந்து விடக் கூடாது
* சர்ச்சையாக பேசி அமைச்சர் பதவியை இழந்தவர் பொன்முடி
* பொன்முடியின் உள்ளடி அரசியலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புலம்பும் நிர்வாகிகள்


லட்சுமணன் மீதான காழ்ப்புணர்ச்சியில், அவரது ஆதரவாளர்களுக்கு கூட சீட்டு கொடுக்க விடாமல் தடுக்க முயற்சிப்பதாக பொன்முடி மீது புகார் கூறப்படுகிறது. லட்சுமணனின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ் வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வரும் நிலையில், அந்த தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க எத்தனித்து வருகிறார் பொன்முடி என்கிறார்கள். எவ்வளவு தான் கட்சி பணிகள் செய்தாலும் பொன்முடியை தாண்டி எதுவும் செய்ய முடிவதில்லையே என லட்சுமணன் தரப்பு வருத்தத்தில் இருக்கிறார்களாம். வருகிற தேர்தலில் லட்சுமணன் வெற்றி பெற்றால் எப்படியும் அமைச்சர் பொறுப்பு கிடைத்து விடும் என்பதால் உள்ளடி அரசியலில் பொன்முடி தீவிரம் காட்டி வருகிறார். தன்னை மீறி லட்சுமணனுக்கு சீட்டு கிடைத்தாலும் தேர்தல் உள்ளடி வேலை மூலம் வெற்றியை தடுத்து எதிர் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என கணக்கு போட்டு தயாராக இருக்கிறார் பொன்முடி எனவும் சொல்லப்படுகிறது.

* சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற லட்சுமணன்
* செல்வாக்கை கண்டு அஞ்சும் முன்னாள் அமைச்சர் பொன்முடி
* எம்.எல்.ஏ. லட்சுமணனை காலி செய்ய அவரது ஆதரவாளர்களை குறி வைக்கும் பொன்முடி


இது ஒரு பக்கம் இருக்க, மகனின் அரசியல் எதிர்காலத்திற்காக விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவை காலி செய்ய பொன்முடி திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்.பி.யான கௌதம சிகாமணிக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் மகனை களமிறக்க முடிவு செய்து தலைமையை அணுகி வருகிறாராம். விக்கிரவாண்டியில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, தொகுதி மக்களுக்கு பரீட்சையமானவராக மாறி விட்டார். எங்கு என்ன நடந்தாலும் நேரில் சென்று விடும் அன்னியூர் சிவா மீது மக்கள் மத்தியிலும் நல்ல அபிப்ராயம் இருக்கும் நிலையில், 2026 தேர்தலிலும் அவருக்கே சீட்டு வழங்கப்படலாம் என பேசப்பட்டு வந்தது.

* மகனுக்கு சீட்டு வாங்க அன்னியூர் சிவாவை காலி செய்ய திட்டம்
* விக்கிரவாண்டி தொகுதியை மகன் கௌதம சிகாமணிக்கு வாங்கி கொடுக்க மும்முரம்
* எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக உள்ளடி வேலை


ஆனால், அன்னியூர் சிவாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விக்கிரவாண்டியில் மகனை களமிறங்க பொன்முடி முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால், விழுப்புரம் மாவட்ட திமுக உடன் பிறப்புகளிடையே குழப்பமும் கலக்கமும் நிலவி வருகிறது. பொன்முடிக்கு எதிராக தொடர்ச்சியாக வரும் புகார்களை திமுக தலைமை கண்டுக் கொள்ளுமா? கடந்து செல்லுமா? என்பது போக போக தான் தெரியும்.

Related Link
ஆப்ரேஷன் தேமுதிக, பாலில் விழுந்த பழம்

ஆப்ரேஷன் தேமுதிக, பாலில் விழுந்த பழம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 37 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved