news-tamil-logo

3/16/2026, 8:50:35 PM

news-tamil-logo
more
Home districtnews சாலையை சீரமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

சாலையை சீரமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோபிசெட்டிபாளையம், ஈரோடு

Posted on: Feb 13, 2026 01:42 PM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erd road

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் :

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலைகரடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இக்கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்கும் பள்ளி கல்லூரி செல்வதற்கும் அவசர தேவைகளுக்கும் என அப்பகுதியில் உள்ள கீழ்பவானி கிளை வாயக்கால் சாலை வழியாக வாகனங்களில் வேட்டைகாரன்கோவில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வேட்டைகரன்கோவில் தங்கமலைகரடு செல்லும் சாலை கடந்த 10ஆண்டுகளாக சிதலமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள்,
பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர் மழைகாலங்களில் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டி தங்கமலைகரடு கிராம மக்கள் தொடர்ந்து அமைச்சர், மாவட்ட ஆட்சியர், ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து நடவடிக்கை இல்லாத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் சாலைவசதி ஏற்படுத்த வேண்டி.

தங்கமலைகரடு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வேட்டைகாரன்கோவில் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத்தால் இன்று தங்கமலைகரடு கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வேட்டைகாரன்கோவிலில் திரண்டு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை புறகணிப்பதாக சாலையை சீரமைக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என கூறி பிளெக்ஸ் பேனர் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தேர்தலை புறக்கணிப்பதாக முழக்கங்களை எழுப்பியதால்.

அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது விரைவில் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் புறக்கணிப்பில் தங்கமலைகரடு கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
புறவழிச் சாலையோரம் கொட்டப்பட்டும் நகராட்சி குப்பைகள்

புறவழிச் சாலையோரம் கொட்டப்பட்டும் நகராட்சி குப்பைகள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
4 hrs 28 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved