news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்கள் முன்பு அடித்ததால் ஆத்திரம்
tv

Also Watch

பெண்கள் முன்பு அடித்ததால் ஆத்திரம்

வெள்ளிமேடு பேட்டை, விழுப்புரம்

86

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி. பாறைகளுக்குள் இருந்து வீசிய துர்நாற்றம். பாறைகளுக்கு இடையே அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கண்டு அதிர்ந்த விவசாயி. 18 நாட்களுக்கு பிறகு கொலையாளியை கைது செய்த போலீஸ். அடுத்தடுத்த விசாரணையில் வெளியான பகீர் தகவல். இளைஞர் கொலை செய்யப்பட்டது ஏன்? கொடூர கொலையின் பின்னணி என்ன?

* கணவரை காணவில்லை என போலீசில் புகார்
* பாறைகளுக்கு இடையே கிடந்த இளைஞரின் சடலம்
* உயிரிழந்தது யார்? கண்டுபிடித்த போலீஸ்


ஜனவரி 30ம் தேதி, வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்துக்கு போன பெண் ஒருத்தங்க வேலைக்கு போன தன்னோட கணவர் இப்ப வர வீட்டுக்கு வரலன்னு புகார் அளிச்சுருக்காங்க. உடனே அந்த புகார வாங்குன போலீஸ் கணவர் சசிகுமார பல இடங்கள்ல தேடிருக்காங்க. இதுக்கிடையில சிறுவலூர் பகுதி வழியா ஒருத்தரு ஆடு மேய்ச்சுட்டு இருந்தாரு. அப்ப அங்குள்ள பாறைகளுக்கு இடையில இருந்து துர்நாற்றம் வீசிருக்கு. எதுக்கு இங்க இருந்து இப்படி துர்நாற்றம் வீசுது, எலி எதுவும் செத்துக் கிடக்குதான்னு போய் பாத்துருக்காரு. அப்ப அங்க ஃபுல்லா அழுகி போன நிலையில ஒரு சடலம் கிடந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்சவர் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாரு. இத கேட்டு உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு சமீபத்துல இளைஞர் யாரும் காணாம போனதா மிஸ்ஸிங் கேஸ் ஏதும் ஃபைல் ஆகிருக்கான்னு பாத்துருக்காங்க. அதுபடி ஏற்கனவே புகார் அளிச்ச இளம்பெண்ண கூப்டு வந்த போலீஸ் சடலத்த அடையாளம் காட்டிருக்காங்க. அதுல தான் உயிரிந்தது சசிக்குமார்ன்னு தெரியவந்துருக்கு.

* ஜெகதீஸின் செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்த போலீஸ்
* ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்த சசிக்குமார்
* சசிக்குமார் - ஜெகதீஸ் இருவரும் நெருங்கிய நண்பர்கள்


அதுக்கடுத்து சசிக்குமார கொலை செஞ்சது யாரு? உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்குதான்னு கிராம மக்கள் கிட்ட கேட்ருக்காங்க போலீஸ். அப்ப ஜெகதீஸ்-ங்குற நபர் தான் சசிக்குமார பைக்ல கூப்டு போனதா சொல்லிருக்காங்க. இதனால ஜெகதீஸ பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க போலீஸ். அவரோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி பாத்துருக்காங்க. அதவச்சு அங்கொரு கிராமத்துல பதுங்கியிருந்த ஜெகதீஸ கையும் களவுமா பிடிச்ச போலீஸ் அவர கஸ்டடியில் எடுத்து விசாரிச்சாங்க.
விழுப்புரம், திண்டிவனத்துல உள்ள வட சிறுவலூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் வெள்ளிமேடு பேட்டை பகுதியில ஆட்டோ ஓட்டுனராக வேலை பாத்துட்டு இருந்தாரு. இவரும் அதே பகுதியை சேந்த ஜெகதீஸ்-ங்குற நபரும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ். ரெண்டு பேரும் ஒன்னா உட்காந்து மது குடிக்கிறது, ஜாலியா ஊர் சுத்துறதுன்னு இருந்துருக்காங்க.

* ஒன்றாக உட்கார்ந்து குடித்த ஜெகதீஸ் - சசிக்குமார்
* ரோட்டில் வைத்து ஜெகதீஸை அடித்த சசிக்குமார்
* சசிக்குமாரை சம்பவம் செய்ய திட்டம் போட்ட ஜெகதீஸ்


மது குடிக்குறப்ப இவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வருமாம். அதுமட்டும் இல்லாம ஜெகதீஸ, சசிக்குமார் பொதுமக்கள் முன்னாடி அடிக்குறது, பெண்களுக்கு முன்னாடி கேவலப்படுத்துறதுமா இருந்துருக்காரு. இதனால ஜெகதீஸ், நீ குடிச்சுட்டு பொதுமக்கள் முன்னாடியும், பெண்கள் முன்னாடியும் என்ன அடிச்சு அசிங்கப்படுத்துற, அது சுத்தமா எனக்கு பிடிக்கல, தயவு செஞ்சு இனிமே அப்படி பண்ணாதன்னு சொல்லிருக்காரு. ஆனா சசிக்குமார் கேட்குற மாதிரி தெரியல. இதனால கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெகதீஸ் சசிக்குமர கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு சசிகுமார் கூப்டுட்டு வெள்ளிமேடு பேட்டை பகுதிக்கு போய்ருக்காரு ஜெகதீஷ். அங்க ரெண்டு பேரும் உட்காந்து குடிச்சுருக்காங்க.

* சசிக்குமாருக்கு மது வாங்கி கொடுத்த ஜெகதீஸ்
* தலையில் கல்லைப் போட்ட கொடூரம்
* ஜெகதீஸை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்


அப்ப சசிக்குமாருக்கு மதுவ ஊத்தி ஊத்தி கொடுத்த ஜெகதீஸ் எத்தனை பேர் முன்னாடி நீ என்ன அடிச்சு அசிங்கப்படுத்திருக்க, அதனால உன்ன நான் உயிரோடையே விட மாட்டேன்னு சொல்லி அவர போட்டு சரமாரியா தாக்கிருக்காரு. அடுத்து கீழ கிடந்த கல்ல எடுத்த ஜெகதீஸ், சசிக்குமாரோட தலையில போட்ருக்காரு. அதுக்கடுத்து சசிக்குமாரோட சடலத்த மறைக்குறதுக்காக அங்குள்ள பாறைகளுக்கு இடையில போட்டுட்டு தப்பிச்சு போய்ட்டாரு. இந்த வழக்க தீர விசாரிச்ச போலீஸ் கிட்டத்தட்ட 18 நாட்கள் கழிச்சு கொலையாளி ஜெகதீஸ அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
அவ என்னோடதான் வாழணும், இல்லன்ன...

அவ என்னோடதான் வாழணும், இல்லன்ன...

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விநாயகர் சதுர்த்தி கோலாகலம், கோயில்களில் பக்தி பரவசம்

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved