news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை
tv

Also Watch

tv

Read this

மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை

சென்னை

39

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chen 1

சென்னையில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை அமைக்கப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி கூட்டத்தில், 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சாலை மற்றும் பாலங்கள் அமைப்பதற்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ரோப் கார் சேவை அறிமுகம்
சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மெரினா கடற்கரையை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்காக கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை (Rope way car)அறிமுகப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோப் கார் சேவை நகரத்தை ஒரு தனித்துவமான கோணத்தில் பார்க்க வழிவகை செய்வதுடன், சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்துகின்றன. இது நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் அழகை ரசிக்க வைக்கும் பரந்த காட்சிகளை (Panoramic views) வழங்குவதோடு மறக்க முடியாத அனுபவங்களையும் உருவாக்கும் வகையில் பொது - தனியார் பங்களிப்பு (PPP) முறையில் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"பசுமைச் சென்னை திட்டம்"
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்களில் மரங்கள் மூலம் பிராணவாயு (Oxygen) உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக சென்னை நகர மக்களின் கூட்டு முயற்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, பொதுமக்கள் பங்கேற்கும் "பசுமைச் சென்னை திட்டம்" என்ற திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
விரைவில் 3 புதிய பயணிகள் படகுகள்

விரைவில் 3 புதிய பயணிகள் படகுகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டொமினிகன் நாட்டின் கடற்கரை சுற்றுலாத் தலத்தில் விபத்து

0
17 mins agoshare
தீ விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved