news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அவ என்னோடதான் வாழணும், இல்லன்ன...
tv

Also Watch

tv

Read this

அவ என்னோடதான் வாழணும், இல்லன்ன...

சேலம்

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் அருகே தன்னுடனான காதலை தொடர மறுத்ததால், போட்டோக்களை மார்பிங் செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிய இளைஞர், சோஷியல் மீடியாவில் பதிவிட்டும் அசிங்கப்படுத்தியதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண் தன்னுடன் வாழாவிட்டால் வேறு யாருடனும் வாழ விடமாட்டேன், தற்கொலையே செய்து கொள்ளட்டும் என இளைஞர் பேசிய அதிர்ச்சி ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், இளம்பெண் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய 4 பக்க கடிதமும் வெளியாகி உள்ளது.

நான்கு ஆண்டுகால காதல்
சேலம் மாவட்டம், (Salem, Tamil Nadu) மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் 22 வயதான சண்முகபிரியா. இவரும் அமரகுந்தி நெய்க்காரவளவை சேர்ந்த 23 வயதான கௌதம் என்ற இளைஞரும் கல்லூரி படித்தபோது 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, படிப்பு விஷயமாக நண்பர்களுடன் பேசினால் சந்தேகப்பட ஆரம்பித்த கௌதம் ஒருகட்டத்தில் காதலி வெளியே எங்கு சென்றாலும் சண்டைபோட்டு டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலடைந்த சண்முகபிரியா காதலை கைவிட்டு கௌதமுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார். தனியார் பள்ளி ஒன்றில் டீச்சராக வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை விடாமல் போன் செய்து டார்ச்சர் செய்துள்ளார் கௌதம். அதோடு, காதலிக்கும்போது எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மார்பிங் செய்து சண்முகபிரியாவின் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சோஷியல் மீடியாவிலும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

நிம்மதியாக வாழவிடமாட்டேன்
இதனை தொடர்ந்து கௌதமிடம் பேசிய இளம்பெண்ணின் அக்கா, தம்பி உறவினர்களுக்கு போட்டோக்களையும், வீடியோக்களையும் அனுப்புவதில் நியாயம் இல்லை, உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கத் தானே செய்கிறார்கள் எனக்கூறியதோடு இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்தாகவும் தெரிகிறது.
அந்த எச்சரிப்பையெல்லாம் சட்டை செய்யாத இளைஞர், சண்முக பிரியாவின் வீட்டிற்கே நேரில் சென்று மிரட்டி உள்ளார். தன்னை தவிர வேறு யாரை திருமணம் செய்தாலும் இளம்பெண்ணை நிம்மதியாக வாழவிடமாட்டேன், தான் யாருக்கும் பயப்படவும் மாட்டேன் என அக்கம்பக்கத்தினர் பார்க்கும்படி அசிங்கப்படுத்தி உள்ளார். அதோடு, காவலராக உள்ள கௌதமின் சித்தியும் சண்முகபிரியாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனால், அவமானப்பட்ட சண்முப்பிரியா, தான் தற்கொலை செய்து கொள்வேன் என தாய் மற்றும் அக்காவிடம் சொல்லி அழுதுள்ளார். அதற்கு, நாங்கள் இருக்கிறோம் எதை பற்றியும் கவலைப்படாதே என இளம்பெண்ணின் தாயும் சகோதரியும் சண்முக பிரியாவிற்கு தைரியம் கொடுத்ததோடு, கௌதமின் வீட்டிற்கு நேரில் சென்று பேசி உள்ளனர்.

அவளை நிம்மதியாக வாழவிடமாட்டேன்
தனது வீட்டிற்கு வந்து பஞ்சாயத்து பேசியதால் ஆத்திரமடைந்த கௌதம், சண்முக பிரியாவின் அக்காவிற்கு போன் செய்து வாய்க்கு வந்தபடி பேசி உள்ளார். சண்முகபிரியா செத்தால் தனக்கென்ன? சாகட்டும் என கௌதம்கூற உங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லையா? என இளம்பெண்ணின் அக்கா கேட்டுள்ளார். அதற்கு, எங்கள் பெண் பிள்ளைகள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக்கூறிய கௌதம் அவளை நிம்மதியாக வாழவிடமாட்டேன் எனக்கூறியதோடு சண்முகபிரியாவின் கேரக்டரையே தவறாக பேசி உள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்
இப்படி, கௌதம் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டும்வகையில் பேசியது குறித்து கௌதமின் தாய் மற்றும் சகோதரியிடம் கூறி உள்ளார் சண்முகபிரியாவின் அக்கா. ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத இளைஞரின் உறவினர்கள், 4 ஆண்டுகள் காதலித்தபோதே கண்டித்து வைத்திருக்க வேண்டும், தற்போது என்ன செய்ய முடியும்? இளைஞர் பொறுமையாகதான் மாறுவார் என பொறுப்பில்லாமல் பேசி உள்ளனர். இப்படி கௌதம் அழுத்தத்திற்குமேல் அழுத்தம் கொடுக்க, 4 பக்க கடிதம் எழுதி உள்ளார் சண்முக பிரியா. தனது சாவுக்கு காரணம் கௌதம்தான், அவர் கொடுத்த டார்ச்சர்தான் தன்னை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது, அவரையும் அவரது குடும்பத்தினரையும் விட்டுவிடாதீர்கள், தன் மானத்தை வாங்கிய கௌதமுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சண்முகபிரியா.

சண்முகப்பிரியா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கௌதமையும் அவரின் குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர். ஆரம்பத்திலேயே போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தால் பிரச்சனை இவ்வளவு தூரம் வளர்ந்து ஒரு உயிரை குடித்திருக்காது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Related Link
ஆவியுடன் பேச மாந்திரீகம் செய்த காதலன்

ஆவியுடன் பேச மாந்திரீகம் செய்த காதலன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 39 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved