Also Watch
Read this
By: Manigandan Raja

சின்னத்தின் அடையாளத்தை அணிந்து கொண்டு ஓட்டு சாவடிக்குள் செல்லக்கூடாது :
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டசபை தொகுதியில் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மானாமதுரை அருகே உள்ள ராஜ கம்பீரம் கிராமத்தைச்
சேர்ந்த வக்கீல் குரு முருகானந்தம் போட்டியிடுகிறார்.
இவரது ஓட்டு ராஜ கம்பீரம் கிராமத்தில் உள்ள நிலையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஓட்டு சாவடிக்கு கட்சியின் துண்டை அணிந்து சென்றபோது
அங்கிருந்த போலீசார் கட்சியின் அடையாளம் மற்றும் சின்னத்தின் அடையாளத்தை அணிந்து கொண்டு ஓட்டு சாவடிக்குள் செல்லக்கூடாது என அவரை தடுத்து நிறுத்தினர்.
சிறிது நேரம் அவர் போலீஸ் வாக்குவாதம் செய்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் துண்டோடு ஓட்டு சாவடிக்கும் செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்ததை தொடர்ந்து துண்டை எடுத்துவிட்டு பின்னர் ஓட்டுச்சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.