Also Watch
Read this
By: Fyrose Banu

பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை நடிகை மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் புகார்
பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து பணம் பறிக்கும் நோக்கில் திருநங்கை செயல்பட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றியும் தனது மனைவி பற்றியும் அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் புகார் அளித்துள்ளார்.