news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
tv

Also Watch

அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்

கீழமணலி, திருவாரூர்

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Paddy issue

நெல் மூட்டைகள் தேக்கம்  :

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது தற்பொழுது மாவட்டம் முழுவதும் அறுவடை பணியில் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூத்தாநல்லூர் வட்டத்துக்குட்பட்ட கீழமணலி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கீழமணலி காரநாதன் கோயில் சேந்தனாங்குடி பூந்தாலங்குடி மேல மணலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்
விளைவித்த நெல்லினை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 15,000 க்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் பிடிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் அப்படியே தேங்கியுள்ளது.

இதன் காரணமாக மற்ற விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையம் முன்பு
அடுக்கி வைத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது கூட மழை பெய்வதால் நனையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்.

போதுமான மரக்கட்டைகள் தார்பாய்கள் உள்ளிட்ட வசதிகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நெல் மூட்டைகள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் உடனடியாக தேங்கியுள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும்.

காத்திருக்கக்கூடிய விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Link
சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடாவில் இருந்து ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்ட திமிங்கலங்கள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved