Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல், பழைய கரூர் ரோடு ஜி டி என் கல்லூரி அருகே ஸ்ரீ குமரன் பலசரக்கு கடை கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடியது மட்டுமின்றி கட்டை பை நிறைய மளிகை பொருட்களையும் அள்ளி சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் மர்ம நபர்கள் பழைய கரூர் சாலை தனியார் கல்லூரி அருகே அமையப்பெற்ற ஸ்ரீ குமரன் பலசரக்கு கடையில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் மறுநாள் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 5000 க்கும் மேற்பட்ட பணத்தைத் திருடினார்.

மேலும் கடையில் இருந்த கட்டைப்பை ஒன்றை எடுத்துக்கொண்டு மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கட்டை பையில் போட்டு திருடி சென்றனர். காலையில் வந்து கடையை பார்த்த உரிமையாளர் கடையின் பூட்டு உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு பலசரக்கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்த சிசிடிவி பதிவில் இரண்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved