news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் முன் உலா வந்த சிறுத்தை, சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

வீட்டின் முன் உலா வந்த சிறுத்தை, சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி

வயநாடு, கேரளா

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tiger

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள மேப்பாடி பூதக்கொல்லி கிராமத்தில், ஒரு வீட்டின் முன்பு உலா வந்த சிறுத்தையின் CCTV காட்சி பதிவாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டம் முழுவதும் தேயிலை, காபி தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளுக்குள் உலா வரும் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதரணமாக சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே மேப்பாடி, பூதக் கொல்லி கிராமத்தில் இரை தேடி உலா வந்த சிறுத்தை வீட்டின் முன்பு ஒய்யாரமாக நடந்து வந்தது. பின்பு மீண்டும் வந்த வழியாக திரும்பிச் சென்றது.

வீட்டின் முன்பு சிறுத்தை உலாவிய காட்சி CCTV கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் பூதக்கொல்லி கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கிராம பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

0
1 min agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau