news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அடங்கல் இல்லாமல் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை
tv

Also Watch

tv

Read this

அடங்கல் இல்லாமல் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை

புலியூர், தென்காசி

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNK Paddy

நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை :

தென்காசி மாவட்டத்தில், சிற்றாறு பாசனத்தின் மூலம் பிசான சாகுபடியில், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் முடிந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழப்புலியூர் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாத நிலையில் நெல் கொள்முதல் நிலையத்திலேயே 10 நாட்கள் நெற்பயர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது நெற்பயிர்களின் தேக்கத்தால் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர்.

தற்போது நடைபெற்று கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால் நெல் கொள்முதல் பணி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மேலும் அடங்கல் ரசீது இருந்தால் மட்டுமே நெற்பயிர்களை கொள்முதல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவிப்பதால் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் நெற்பயிர்களை தம்பிராட்டி அம்மன் கோவில் வளாகத்தில் குவித்து வைத்து 10 நாட்களுக்கு மேலாக பாதுகாத்து வருகின்றனர். மேலும் தனியாரிடம் நெல் விற்பனை செய்வதால் குறைவான விலைக்கே கொள்முதல் செய்கின்றனர்.

நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் விவசாயம் செய்தால் வருடம் தோறும் ஏதாவது ஒரு பிரச்சினை மூலம் நெல் கொள்முதல் என்பது பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. எனவே அரசு மற்றும் அரசு அதிகாரிகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெற்ப்பயிர்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
அனுமதியின்றி நிறுவப்படும் சோலார் நிறுவன மின்கம்பங்கள்

அனுமதியின்றி நிறுவப்படும் சோலார் நிறுவன மின்கம்பங்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்

3
7 hrs 39 mins agoshare
மாணவர்கள் மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved