Also Watch
Read this
By: Web Team

கொடைக்கானல் அருகே தலையாறு அருவி பகுதிக்கு, ஆபத்தான பாறைகளின் இடுக்குகளில் தவழ்ந்து செல்லும் இளைஞர்களால், அச்சம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலகுண்டு - கொடைக்கானல் பிரதான சாலையின் முகப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது தான் இந்த தலையாறு அருவி. சுமார் 975 அடி உயரம் உள்ள இந்த அருவி, மிக உயரமான அருவியாக பார்க்கப்படுகிறது. கரும்பாறைகள் மீதிருந்து விழக்கூடிய தண்ணீர், எலியின் வால் தோற்றத்தில் இருப்பதால் இது, எலிவால் அருவி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அருவியை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்றால், அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள பாறைகள் மற்றும் ஆபத்தான வனப்பகுதியை தாண்டி மட்டுமே செல்ல முடியும் என்பதால், இதற்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில், தங்களை பிரபலம் அடைய செய்ய வேண்டும் என நினைத்து, சில இளைஞர்கள் தலையாறு அருவி பகுதிக்கு தடையை மீறி செல்கின்றனர்.

பாறைகளின் இடுக்குகளில் தவழ்ந்து செல்வது, உயரமான பாறைகளில் இருந்து மற்றொரு பாறைக்கு தாண்டுவது, அடர்ந்த வன பகுதிக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது போன்ற வீடியோ காட்சி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தான சுற்றுலா செல்லக்கூடிய இளைஞர்களை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.