Also Watch
Read this
By: Web Team

கர்நாடகா மாநிலம் கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா, 4 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடத்தை காணிக்கையாக செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.
மூகாம்பிகையின் தீவிர பக்தரான இளையராஜா, அம்மனுக்கு பல்வேறு வகையான நகைகளால் அலங்கரித்து மகிழ்வித்து இருக்கிறார். இம்முறை, வைர கிரீடம், ஆபரணங்கள், வீரபத்திரருக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வாளை காணிக்கையாக வழங்கி வழிபட்டார்.
ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்படுவதற்கு முன்பு, ஊர்வலம் நடைபெற்றது. அதில், கோவில் நிர்வாக குழுவினரும், அர்ச்சகர்களும் பங்கேற்றனர்.