Also Watch
Read this
By: Srini Vasan

காசா மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் அழிவுத் தாக்குதல்களை கண்டும் காணாமல் இந்தியா மவுனம் காப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்தியா குரலற்றதாக இருப்பது மட்டுமின்றி தனது கொள்கைகளையும் அடகு வைத்து விட்டதாக மத்திய பாஜக கூட்டணி அரசை அவர் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் சுதந்திரமான பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் என இரண்டு நாடுகள் உருவாக வேண்டும் என்ற நீண்ட நாள் கொள்கையில் இருந்து மோடி அரசு தவறி விட்டதாக குறை கூறியுள்ளார்.
தற்போது ஈரானையும் இஸ்ரேல் தாக்குவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதை கண்டிக்காமல் இந்தியா நமது பாரம்பரியமிக்க மரபுகள் மற்றும் ராஜீய உறவுகளில் இருந்து தடம் புரண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை..