news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் மிக அருகே சென்ற வீடியோ
tv

Also Watch

tv

Read this

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் மிக அருகே சென்ற வீடியோ

எப்படி அனுமதிக்கப்பட்டனர் ?

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CJP பேரணி

நாடாளுமன்றத்தை நோக்கிய CJP போராட்டக்காரர்களின் பேரணி

ஜந்தர் மந்தரிலிருந்து CJP போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றதன் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் ,டெல்லி காவல்துறையின் தயார் நிலை குறித்த கேள்வியை எழுப்பிஉள்ளது.

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20 ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணி குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் மிக அருகே வரை எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.போராட்டக்காரர்களைத் தடுப்பதற்கான போதுமான தடுப்புகள் அமைக்கப்படாதது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

புதிய போராட்ட மிரட்டல்களை விடுத்த CJP 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் புதிய போராட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறை, துணை ராணுவப் படைகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் போராட்டங்களின்போது தடுப்புகளை அகற்றுவதைத் தடுக்கும் வகையில், ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் உள்ள தடுப்புகள் ஒன்றோடொன்று வெல்டிங் மூலம் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற வாக்குறுதியை மத்திய அரசு மீறியதாக குற்றம் சாட்டிய CJP மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மிரட்டல் விடுத்ததுள்ளது.

வாகனங்களில் இ20 பெட்ரோலால் பெரிதாக பாதிப்பேதும் ஏற்படாது 

இ20 பெட்ரோலால் 2005 முதல் 2016 வரையில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 வாகனங்களில் மட்டும் சில ரப்பர் பாகங்களும் கேஸ்கட்டுகள் பாதிக்கப்படலாம் என்றும், இருப்பினும், இதனை வாகனங்களின் வழக்கமான சர்வீஸிலேயே எளிதாகச் செய்துவிட முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் இ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நிதின் கட்கரி, பழை வாகனங்கள் இ20 பெட்ரோலில் இயங்கும்போது, அவற்றின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வேறுபாடோ வழக்கத்துக்கு மாறான தேய்மானங்களோ எதுவும் காட்டவில்லை என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறினார்.

Related Link
பீகார், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் இன்று இடைத்தேர்தல்

பீகார், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் இன்று இடைத்தேர்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசுக்கு கண்டனம்

0
30 mins agoshare
திருமா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau