மருமகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கதறி கதறி அழுத மாமனார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸ். கழுத்தில் காயங்கள் இருந்ததாக வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த மாமனாரை விசாரித்த போலீஸ். மருமகளை கொன்றுவிட்டு மாமனார் தற்கொலை நாடகமாடியது ஏன்? பின்னணி என்ன?* மருமகள் மரணம், நாடகமாடிய மாமனார்* பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்* மருமகளின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக வெளியான ரிப்போர்ட் காலை நேரம், பொதுமக்கள் தூங்கி எழுந்த நேரத்துல, அப்பாஸ்-ங்குற முதியவர் வீட்டுல அழுகை சத்தம் கேட்டிருக்கு. தன்னோட மருமகள் தூக்கு மாட்டி உயிரிழந்துட்டதா கத்தி கதறி அழுதுருக்காரு. பக்கத்து வீட்டுக்காரங்க போய் பார்த்தா, ஒரு அறைக்குள்ள இளம்பெண் முஸ்காரா தூக்குல பிணமா தொங்கிருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு, முதியவர் அப்பாஸ் கிட்ட விசாரிச்சுருக்காங்க. உங்க மருமகள் எதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டாங்க? வீட்ல ஏதாவது பிரச்னை ஏற்பட்டுச்சான்னு கேட்ருக்காங்க. அப்ப முதியவர் அப்பாஸ் முன்னுக்கு பின் முரணா பதில் அளிச்சு உளறிருக்காரு. இதனால போலீஸ்க்கு அந்த முதியவர் மேல சந்தேகம் ஏற்பட்டிருக்கு. இதுக்கிடையில வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல இளம்பெண் முஸ்காராவோட கழுத்துல காயங்கள் இருந்ததா குறிப்பிட்டு இருந்துச்சு. இதனால முஸ்காராவோட உயிரிழப்புல ஏதோ ஒரு மர்மம் ஒழிஞ்சுருக்குன்னு நினைச்ச போலீஸ், முதியவர் அப்பாஸ கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. * மாமனார் அப்பாஸை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ்* பஞ்சாப்பில் வேலை செய்து வந்த கணவர் சல்மான்* வீட்டில் மாமனாருடன் வசித்து வந்த மனைவி முஸ்காரா உத்தரப்பிரதேசத்துல உள்ள ஷாம்லி பகுதியை சேந்தவரு சல்மான். இவருக்கும் கைரானா பகுதியை சேந்த முஸ்காரா-ங்குற பெண்ணுக்கும் சில வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கான். சல்மானோட அப்பாவும் இவங்க கூட தான் வசிச்சுட்டு இருந்தாரு. இவங்களோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்ததால, சல்மான் பஞ்சாப்புக்கு வேலைக்கு போய்ருக்காரு. கணவன் பஞ்சாப்புக்கு வேலைக்கு போனதுக்கு அப்புறம் மனைவி, மகன், தந்தைன்னு மூணு பேர் மட்டும் வீட்ல வசிச்சுட்டு இருந்தாங்க. இதுக்கிடையில அப்பாஸ்க்கு மருமகள் முஸ்காரா மேல தப்பான எண்ணம் உருவாகிருக்கு.* மருமகளிடம் நெருங்கி பழகி வந்த மாமனார் அப்பாஸ்* முன்னாள் காதலனுடன் மருமகளை பழக வைத்த மாமனார்* மருமகள் குறித்து மகனிடம் தவறாக கூறிய மாமனார் அப்பாஸ் மருமகள எப்படியாவது அடைஞ்சே தீரனும்னு ஆசைப்பட்ட அப்பாஸ், முஸ்காரா கிட்ட நெருக்கமா பழகிருக்காரு. உன் கணவன மாறி நான் ஸ்டிக்டா இருக்க மாட்டேன், நான் உன் கூட ஜாலியா பேசுவேன்னு ஆரம்பிச்சு, ஸ்கூல், காலேஜ் லைப் ஸ்டோரி எல்லாத்தையும் கேட்ருக்காரு. அடுத்து காலேஜ் லைப்ல யாரையாவது லவ் பண்ணிருக்கியான்னு கேட்ருக்காரு மாமனார். அதுக்கு மருமகள் நான் காலேஜ் லைப்ல ஜாவேத்-ங்குற இளைஞர லவ் பண்ணேன், ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அவன் கூட பேசுறது கிடையாதுன்னு சொல்லிருக்காங்க. இதகேட்ட மாமனார், ஜாவேத்தோட வீட்ட கண்டுபிடிச்சு, அவர தன்னோட வீட்டுக்கு கூப்டு வந்து மருமகள் முஸ்காரா கூட பழக விட்ருக்காரு. அப்ப ரெண்டு பேரும் ஒன்னா நின்னு பேசிட்டு இருந்தத போட்டோ எடுத்த அப்பாஸ, அத தன்னோட மகன் சல்மானுக்கு அனுப்பி, உன்னோட மனைவி வேற ஒருத்தன் கூட தகாத உறவுல இருக்கா, நான் எவ்ளவோ அட்வைஸ் பண்ணி பார்த்தேன், அவ கேக்கலன்னு பொய் சொல்லிட்டாரு.* மருமகளுக்கு விபரீதம், கொடூர மாமனார் அப்பாஸ்* நாடகமாடிய மாமனார்* அப்பாஸ், சல்மானை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்சம்பவத்தன்னைக்கு, நைட்டு முஸ்காரா அவரோட ரூம்ல தூங்கிட்டு இருந்தாங்க. அப்ப ஜன்னல் வழியா கைவிட்டு அந்த ரூமோட கதவ தொறந்த அப்பாஸ், மருமகள் கிட்ட தப்பா நடக்க பாத்துருக்காரு. ஆனா சுதாரிச்சுக்கிட்ட மருமகள், மாமனார கீழ தள்ளி விட்ருக்காரு. இதனால கடும் கோபமான அப்பாஸ், முஸ்காராவ கழுத்த நெரிச்சு கொடூரமா கொன்னுருக்காரு. அடுத்து தன்னோட மகனுக்கு ஃபோன் பண்ண அப்பாஸ், உன் மனைவி கிட்ட, ஜாவேத் கூட பழக வேண்டான்னு சொல்லி பாத்தேன், அவ கேக்கல, அதனால அவ கதைய முடிச்சுட்டேன்னு சொல்லிருக்காரு. அதகேட்டு எந்த ஒரு ரியாக்சனும் கொடுக்காம இருந்துருக்காரு சல்மான். அடுத்து மகன் சொன்ன ப்ளான் படி, முஸ்காராவ தூக்குல தொங்க விட்டுட்டு தற்கொலைன்னு நாடகமாடிருக்காரு அப்பாஸ். ஆனா பிரேத பரிசோதனை அறிக்கை மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் மாமனார் அப்பாஸ் மற்றும் சல்மான் ஆகிய ரெண்டு பேர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link 3 மனைவிகள், குடும்பமாக சேர்ந்து கேடி வேலை